| கேமசரியார் இலம்பகம் |
870 |
|
|
|
(இ - ள்.) காழகச் சேற்றுள் வீழ்தர - கருஞ்சேற்றிலே விழும்படி; கதிர்மணிக் குடத்தின் தீ பால் ஏந்திச் சொரிவதே போல் - ஒளிவிடும் மணிக்குடத்திலே இனிய பாலை ஏந்திச் சொரிவதைப்போல; விளங்கும் ஒளித்திங்கள் புத்தேள் - விளங்கும் ஒளியுறும் திங்களாகிய தெய்வம்; தீ கதிர் சூழ் இருள் தொழுதி மூழ்கச் சொரிந்து - இனிய கதிரைச் சூழ்ந்த இருள் திரளிலே முழுகும்படி பெய்து; நல்லார் மாழைகொள் முகத்தின் தோன்றி - மகளிருடைய பசத்தல்கொண்ட முகம்போலே தோன்றி; வளைகடல் முளைத்தது - வளைந்த கடலிலே தோன்றியது.
|
|
(வி - ம்.) காழகம் - கருமை. கருஞ்சேறு : இருளிற்கும் பால் நிலவிற்கும் உவமை. ஒளி வீழ்தலேயன்றி இருள் அகலாமையின் சேற்றிற் பெய்த பால் என உவமை கூறினர். புத்தேள் - கடவுள். தொழுதி - திரள். வளைகடல் : வினைத்தொகை.
|
|
மாழை - பொன். விடியற் காலத்தெழுந்த நிலவு இருளைக்கெடுத்தல் ஆகாமையின் இங்ஙனம் கூறினார்.
|
( 130 ) |
| 1542 |
ஏறனாற் கிருளை நீங்கக் கைவிளக் கேந்தி யாங்கு | |
| |
வீறுயர் மதியந் தோன்ற விரைவொடு போய பின்றை | |
| |
மாறிலாப் பருதி வட்டம் வருதிரை முளைத்த வாங்க | |
| |
ணாறுசெ லொருவற் கண்ண லணிகல மருள லுற்றான். | |
|
|
(இ - ள்.) ஏறனாற்கு இருளை நீங்கக் கைவிளக்கேந்தி யாங்கு - சீவகனுக்கு இருளை ஓட்ட ஏந்திய கை விளக்குப்போல; வீறு உயர் மதியம் தோன்ற - சிறப்புற உயர்ந்த திங்கள் முளைத்தலாலே; விரைவொடு போய பின்றை - சீவகன் சிறிது தூரம் விரைந்து நீங்கிய பிறகு; மாறு இலாப் பரிதிவட்டம் வருதிரை முளைத்த ஆங்கண் - மாறுபடாத ஞாயிறு, மோதும் அலையுறு கடலிலே முளைத்த அளவிலே; ஆறு செல் ஒருவற்கு - அவ்வழியே செல்லும் ஒருவனுக்கு; அண்ணல் அணிகலன் அருளல் உற்றான் - சீவகன் தன் அணிகலன்களைக் கொடுக்கவிரும்பினான்.
|
|
(வி - ம்.) ஏறனான் : ஆண் சிங்கத்தை ஒத்த சீவகன். சீவகன் இருளில் செல்லக் கண்டிரங்கிய விண்ணோர் ஒரு கை விளக்கேந்தினாற்போன்றென்க. வீறு : வேறொன்றற் கில்லாத அழகு. திங்கள்போலத் தேய்தலும் வளர்தலும் மறைதலும் இல்லாமையின் மாறிலாப் பரிதிவட்டம் என்றார். பரிதி வட்டம் - ஞாயிற்று மண்டிலம்.
|
|
வருதிரை : கடல். வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஏறு + அனான் = ஏறனான். அன்னான் என்பது அனான் எனத் தொகுத்தல் விகாரம் ஆயிற்று. இல்லா என்பது இலா என நின்றதும் அது.
|
( 131 ) |