| கேமசரியார் இலம்பகம் |
871 |
|
|
வேறு
|
| 1543 |
எவ்வூரீர் ரெப்பதிக்குப் போந்தீர்நும் | |
| |
மனைவியர்தா மெனைவர் மக்க | |
| |
ளொவ்வாதார் தாமெனைவ ரொப்பார்மற் | |
| |
றெனைவர்நீ ருரைமி னென்றாற் | |
| |
கிவ்வூரே னிப்பதிக்குப் போந்தேனென் | |
| |
மனைவியரு நால்வர் மக்க | |
| |
ளொவ்வாதார் தாமில்லை யொப்பா | |
| |
னொருவனென வுரைத்தான் சான்றோன். | |
|
|
(இ - ள்.) எவ்வூரீர் - நீர் எவ்வூரிலே யிருப்பீர்?; எப்பதிக்குப் போந்தீர் - எவ்வூர்க்கு வந்தீர்?; நும் மனைவியர் தாம் எனைவர் - நும் மனைவியர் எத்துணைவர்?; மக்கள் ஒவ்வாதார் தாம் எனைவர் - மக்களில் ஒழுக்கமில்லாதார் எத்துணைவர்?; மற்று ஒப்பார் எனைவர் - ஒழுக்கமுடையார் எத்துணைவர்?; உரைமின் என்றாற்கு - கூறுமின் என வினவினாற்கு; இவ்வூரேன் - இப்போது இவ்வுடம்பினிடத்தேன்; இப்பதிக்குப் போந்தேன் - இவ்வுடம்பெடுத்தற்குப் போந்தேன்; என் மனைவியரும் நால்வர் - எனக்கு மனைவியர் நான்கு பேர்; மக்கள் ஒவ்வாதார் தாம் இல்லை - மக்களில் ஒழுக்கமிலாதார் இல்லை; ஒப்பான் ஒருவன் - ஒழுக்கமுடையான் ஒருவன்உளன்; என சான்றோன் உரைத்தான் - என்று உணர்வுடையோன் கூறினான்.
|
|
(வி - ம்.) எனைவர் - எத்தனைபேர். உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலே ஒழுக்கமாதலின், ஒழுக்கமுடைமையை ஒப்பு என்று அஃதில்லாமையை ஒவ்வாமை என்றும் கூறினார்.
|
|
இவ்வூரேன் இப்பதிக்குப் போந்தேன் என்புழி ஊர் பதி என்பன உடல் என்னும் பொருளில் கூறப்பட்டன. உணர்வு என்றது தத்துவ உணர்ச்சியினை. இஃது அணிகலன்களைப் பெறுவோன் பெறுமுன் வினவியது.
|
( 132 ) |
| 1544 |
ஒப்பா னொருமகனே நால்வ | |
| |
ரொருவயிற்றுட் பிறந்தா னென்ன | |
| |
நக்கான் பெருஞ்சான்றோ னம்பிபோல் | |
| |
யாருலகி லினியா ரென்ன | |
| |
மிக்கா னுரைப்பதுவு மிக்கதே | |
| |
போலுமால் வினவிக் கேட்பேன் | |
| |
றக்காய் குறித்த துரையென்றான் | |
| |
றானுரைப்பக் கேட்கின் றானே. | |
|