பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 873 

றமையால் அது நல்வினை என்பது பெற்றாம். உரவோன் - அறிவுடையோன்; ஆற்றலுடையோனுமாம். அல்லாதார் - அவ்வுரவோனைப் பெற மாட்டாதார். பிறர் : மகப்பெறாதார்.

   மக்களும் பிறரே எனற்பால் உம்மை தொக்கது.

( 134 )
1546 படநாகந் தோலுரித்தா போற்றுறந்து
  கண்டவர்மெய் பனிப்ப நோற்றிட்
டுடனாக வைம்பொறியும் வென்றார்க்
  குவந்தீத றான மாகுந்
திடனாகத் தீந்தேனுந் தெண்மட்டு
  முயிர்க்குழா மீண்டி நிற்றற்
கிடனாகு மூனுமிவை துறத்தலே
  சீலமென் றுரைத்தார் மிக்கோர்.
 

   (இ - ள்.) படநாகம் தோல் உரித்தாற்போல் துறந்து - படத்தையுடைய நாகம் தோல் உரித்தாற் போலே அகமும் புறமும் தூயவாகத் துறந்து; கண்டவர் மெய் பனிப்ப நோற்றிட்டு - பார்த்தோர் உடல் நடுங்கும்படி நோற்று; உடன் ஆக ஐம்பொறியும் வென்றார்க்கு - தம் வயத்தனவாக ஐம்பொறிகளையும் வென்றவர்கட்கு; உவந்து ஈதல் தானமாகும் - விரும்பிக் கொடுத்தல் தானம் ஆகும்; தீம் தேனும் தௌ் மட்டும் உயிர்க்குழாம் ஈண்டி நிற்றற்கு இடன் ஆகும் ஊனும் இவை - இனிய தேனும் தெளிந்த கள்ளும் உயிர்த்திரள் கூடி நிற்பதற்கு இடமாகிய ஊனும் ஆகிய இவற்றை; திடன் ஆக துறத்தலே சீலம் என்று மிக்கோர் உரைத்தார் - உறுதியுற நீக்குதலே ஒழுக்கம் என்று பெரியோர் கூறினர்.

   (வி - ம்.) நாகம் தோலுரிக்கும்போது தன் அகத்துள்ள நஞ்சினையும் உமிழ்ந்துவிடும் என்பது பற்றி நச்சினார்க்கினியர், ”படநாகந்தோலுரித்தாற் போலே அகமும் புறமும் தூயவாகத் துறந்து,” என நுண்ணிதின் உரை விரித்தனர். ”வாளரவு தோலும் விடமு நீத்தென்ன” (12 : 98) என்றார் சூளாமணியாரும்.

( 135 )
1547 ஓவா திரண்டுவவு மட்டமியும்
  பட்டினிவிட் டொழுக்கங் காத்த
றாவாத் தவமென்றார் தண்மதிபோன்
  முக்குடைக்கீழ்த் தாதை பாதம்
பூவே புகைசாந்தஞ் சுண்ணம்
  விளக்கிவற்றாற் புனைத னாளு
மேவா விவைபிறவும் பூசனையென்
  றீண்டியநூல் கரைகண் டாரே.