பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 875 

   யரா, மகனிவனா, பின்னா என்னும் மூன்றிடத்தும் ஈற்றுக் ககரமெய்யும் அகரவுயிருங் கெட்டன.

( 137 )
1549 மட்டார்பூம் பிண்டி வளங்கெழு
  முக்குடைக்கீழ் மாலே கண்டீர்
முட்டாத வின்பப் புதாத்திறக்குந்
  தாளுடைய மூர்த்தி பாத
மெட்டானும் பத்தானு மில்லாதார்க்
  கிவ்வுலகி லின்ப மேபோ
லொட்டாவே கண்டீர் வினையவனைத்
  தேறாதார்க் குணர்ந்தீ ரன்றே.

   (இ - ள்.) மட்டு ஆர் பூம் பிண்டி வளம் கெழும் முக்குடைக்கீழ் மாலே - தேன் பொருந்திய மலர்ப் பிண்டியின் அடியில் முக்குடைக்கீழ் எழுந்தருளிய அருகப் பெருமானே; முட்டாத இன்பப் புதாத் திறக்கும் தாள் உடைய மூர்த்தி கண்டீர் - தடையற்ற இன்ப வுலகிற் கதவைத் திறக்குந்தாழாகிய திருவடியை உடைய தலைவன் என்று அறிவீர்களாக; எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு இவ்வுலகில் இன்பமே போல் - எட்டேனும் பத்தேனும் இல்லாதவர்கட்கு இவ்வுலகிலே இன்பம் இல்லாததைப் போல்; அவனைத் தேறாதார்க்கு வினை ஒட்டா கண்டீர் - அவனைத் தெளியாதார்க்கு நல்வினைகள் ஒட்டா என்று அறிவீர்; உணர்ந்தீர் அன்றே - இத்தன்மையை உணர்ந்தீர் அல்லவோ?

   (வி - ம்.) பிண்டி - அசோகு. மால் - அருகன். முட்டாத - தடையில்லாத. புதா - கதவு. தாள் - தாழ்ப்பாள்.

   புதாத்திறக்கும் தாளாகிய பாதமுடைய மூர்த்தி மாலே என்க. எட்டானும் பத்தானும் என்றது சிறிதேனும் என்னும் பொருள்பட நின்றது. இவற்றின் உள்ள ஆனும் உம்மும் அசைகள் என்பர் நச்சினார்க்கினியர்.

( 138 )
1550 வேற்றுவ ரில்லா நுமரூர்க்கே
  செல்லினும் வெகுண்டீர் போல
வாற்றுணாக் கொள்ளா தடிபுறத்து
  வைப்பீரே யல்லிர் போலுங்
கூற்றங்கொண் டோடத் தமியே
  கொடுநெறிக்கட் செல்லும் போழ்தி
னாற்றுணாக் கொள்ளீ ரழகலா
  லறிவொன்று மிலிரே போலும்.