பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 877 

   (வி - ம்.) அளைவது - நுகர்வது. அடுநறவு - காய்ச்சுகின்ற கள்ளுமாம். பின்னாக என்பதன் ஈறுகெட்டது.

( 140 )
1552 இழுதன்ன வெண்ணிணத்த செந்தடிக்கே
  யேட்டைப்பட் டிரும்பிற் போர்த்த
பழுதெண்ணும் வன்மனத்தா ரோட்டைமரச்
  செவியர் கேளார் பால்போன்
றறொழுகியமு தூறுநல் லறத்தை
  யோர்கிலரூன் செய்கோட் டக்குக்
கழுகுண்ண வள்ளூர மேசுமந்து
  புள்ளிற்கே புறஞ்செய் கின்றார்.

   (இ - ள்.) ஊன்செய் கோட்டக்கு - ஊனாற் செய்த உடம்பிற்கு; கழுகு உண்ண வள்ளூரமே சுமந்து புள்ளிற்கே புறம் செய்கின்றார் - கழுகு உண்ணுமாறு அவ்வூனையே சுமந்து அக்கழுகிற்கே புறம் செய்வோராவர்; இழுது அன்ன வெள்நிணத்த செந்தடிக்கே ஏட்டைப்பட்டு - நெய்யனைய வெண்மையான நிணமுடைய செவ்வூனைப் பெறவேண்டுமென்றே இளைத்து; இரும்பிற் போர்த்த பழுது எண்ணும் வன்மனத்தார் - இரும்பினாலே போர்த்த குற்றத்தை எண்ணும் வலிய மனத்தராய்; ஓட்டை மரச் செவியர் கேளார் - ஓட்டையான மரச் செவியராய் அறத்தைக் கேளார்; பால் போன்று ஒழுகி அமுதூறும் நல்லறத்தை ஓர்கிலர் - பால் போலப் பெருகி அமுது ஊறும் நல்லறத்தை அறிகிலர்

   (வி - ம்.) இழுது - நெய். இது நிணத்திற்குவமை. செந்தடி - சிவந்த தசை. ஏட்டைப்படுதல் - இளைத்தல்; எண்மை என்னும் பண்படியாகப் பிறந்த சொல்.

   பழுது - குற்றம். 'பழுதெண்ணும் மந்திரியின்' (குறள். 639) ஊனாற் செய்த உடம்பிற்கு ஊனையே சுமந்து கழுகுக்கே புறத்தைச் செய்கின்றவர் வன்மனத்தராய்ச் செவியராய்க் கேளார்; தாமே அறிவதுஞ் செய்யார் என்க. செய்கின்றவர் தாமே அறிவதுஞ் செய்யார்; கேளார் என மாற்றினும் நன்றே. கோட்டக்குப் புறஞ்செய்கின்றார், புள்ளிற்கே புறஞ்செய்கின்றார் என இரண்டிடத்துங் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.

   ஓட்டையென்றார் உட்கொளாமையின். வள்ளூரம் - ஊன்.

( 141 )
1553 கையாற் பொதித்துணையே காட்டக்
  கயற்கண்ணா ளதனைக் காட்டா
ளையா விளாம்பழமே யென்கின்றீ
  ராங்கதற்குப் பருவ மன்றென்