பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 880 

விளங்குங் கலன்களையெல்லாம்; பொலிவொடு புகன்று நீட்டி - அழகுற விரும்பிக்கொடுத்து; நீர் சென்மின் என்று கூற - நீர் போமின் என்று கூற; வலம்கொண்டு தொழுது சென்றான் - அவன் வலம் வந்து வணங்கிப் போயினான்; வில் மெரீஇ நீண்ட தேளான் வெயில் கடம் நீந்தல் உற்றான் - வில் பயின்று நீண்ட தோள்களை உடையவன் வெம்மையுறும் காட்டுவழியே செல்லத் தொடங்கினான்.

   (வி - ம்.) இன்னாறு - இவ்வாறு. உறுதி : உறுதிப்பொருள். தனக்கு ஞானாசிரியனாகிவிட்டபடியால் வலங்கொண்டு தொழுது சென்றான் என்பது கருத்து. கடம் - காடு

( 145 )

கேமசரியார் இலம்பகம் முற்றிற்று.