| கனகமாலையார் இலம்பகம் | 
884  | 
 | 
  | 
| 
    (இ - ள்.) காயா கலவ மாமயில் எருத்தின் கடிமலர் அவிழ்ந்தன - காயாவின்கண் கலவத்தையுடைய மயிலின் கழுத்தைப் போல மண மலர்கள் விரிந்தன; கோங்கம் பலவும் உலக மன்னவன் திருநாள் ஒளிமுடி அணிந்து நின்றவர் போற் பூத்தன - கோங்கங்கள் பலவும் மாநிலத்தரசனுக்கு முடிசூட்டு நாளிலே, முடி சூடிச் சேவிக்கும் மன்னரென மலர்ந்தன; மரவம் அங்கு ஒருங்கே பைந்துகில் முடி அணிந்து அவர்பின் உலவு காஞ்சுகியவர்போல் பூத்தன - மரவங்கள் அக்காட்டில் ஒன்று சேர, மயிர்க்கட்டுக் கட்டி அவ்வரசர் பின்னே திரியும் மெய்ப்பை புக்க மிலேச்சரைப் போலப் பூத்தன. 
 | 
| 
    (வி - ம்.) கலவம் - கலாபம், தோகை. எருத்தின் - கழுத்தைப் போன்று. கடி - மணம். ”கருநனைக் காயாகணமயில் அவிழவும்” என்றார் சிறுபாணினும் (165). உலக மன்னன் என்றது பேரரசனை. முடியணிந்தவர் என்றமையால் அரசர் என்பது பெற்றாம். கோங்கம் பலவும் பூத்தன என மாறுக. காஞ்சுகி - மெய்ப்பைபுக்க காவன்மாக்கள் - இவரை மிலேச்சர் என்பர் நச்சினார்க்கினியர். 
 | 
( 2 ) | 
|  1559 | 
ஓங்கு மால்வரை வரையா |   |  
|   | 
  டுழக்கலி னுடைந்துகு பெருந்தேன் |   |  
|   | 
றாங்கு சந்தனந் தளரத் |   |  
|   | 
  தழுவி வீழ்வன தகைசா |   |  
|   | 
லாங்கண் மாலுல களப்பா |   |  
|   | 
  னாழி சங்கமொ டேந்தி |   |  
|   | 
தேங்கொண் மார்பிடைத் திளைக்குஞ் |   |  
|   | 
  செம்பொ னாரமொத் துளவே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஓங்கும் மால்வரை வரையாடு உழக்கலின் உடைந்து உகு பெருந்தேன் - உயர்ந்த பெரிய மலைகளிலே உலவும் வரையாடுகள் கலக்குதலின் உடைந்து சிந்துகின்ற மிகுதேன்; தாங்கு சந்தனம் தளரத் தழுவி வீழ்வன - (தாம் விழும்போது) தம்மைத் தாங்கின சந்தனம் தளரும்படி அம்மலையைத் தழுவி வீழ்வன; ஆங்கண் மால் உலகு அளப்பான் ஆழி சங்கமொடு ஏந்தி தேன் கொள் மார்பிடைத் திளைக்கும் செம்பொன் ஆரம் ஒத்துள - அங்கே திருமால் உலகை அளப்பவன் ஆழியையும் சங்கத்தையும் ஏந்தியவன், மார்பிடத்தே அசையும் ஆரத்தைப் போன்றன. 
 | 
| 
    (வி - ம்.) விழும் தேன் அருவிகள் ஆரத்தை ஒத்தன; இறால்கள் சங்கையும் ஆழியையும் ஒத்தன; மலை திருமாலை ஒத்தது, ஆங்கண் அங்கண் என்பதன் விகாரம், தேன் கண்ணுக்கினிமை. வரை தாங்கின சந்தனமும் ஆரம்போன்றன எனினும் ஆம். 
 | 
( 3 ) |