பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 889 

மணி தெளித்தனையது மா நீர் ததும்பி - பளிங்கைக் கரைத்தனையதாகிய நீர் நிறைந்து; தண் என் தாமரை கழுநீர் நீலம் தாது அவிழ் ஆம்பல் எண் இல் பல் மலர் கஞலி - குளிர்ந்த தாமரையும் கழுநீரும் நீலமும் மகரந்தம் மிகுந்த ஆம்பலும் பிறவுமாகிய பல இனமாகிய வண்டுகள் பாண் சாதிபோலே பாடப்பெற்று; வண்ணம் மாச்சுனை உளது - அழகிய சுனை ஒன்று இருந்தது.

   (வி - ம்.) வண்ணமாச்சுனை உளது எனக் கூட்டுக.

   அண்ணல் : சீவகன். முன்னால் என்பதன்கண் ஆல் அசை. தெளித்தல் - கரைத்தல். ததும்பி என்றது நிரம்பி என்றவாறு. கஞலி --நெருங்கி. பாண் முரன்றது என்புழி உவம உருபுதொக்கது. பாண் - பாணர்.

( 10 )

வேறு

1567 கானத்தி னேகு கின்றான்
  கடிபொழிற் கவின்கண் டெய்தித்
தானத்தி லிருந்த லோடுந்
  தையலா ளொருத்தி தானே
வானத்தி னிழிந்து வந்த
  வானவர் மகளு மொப்பா
ணானமும் பூவுஞ் சாந்து
  நாறவந் தருகு நின்றாள்.

   (இ - ள்.) கானத்தின் ஏகுகின்றான் - அத்தகைய வனகிரியைச் சார்ந்த காட்டிலே செல்கின்ற சீவகன்; கடி பொழில்கவின் கண்டு எய்தி - மண மலர்க் காவின் அழகைக் கண்டு அதனை அடைந்து; தானத்தில் இருத்தலோடும் - ஓர் இடத்திலே அமர்ந்திருந்தபோது; தையலாள் ஒருத்தி வானத்தின் இழிந்து வந்த வானவர் மகளும் ஒப்பாள் - பெண்ணொருத்தி விண்ணினின்றிறங்கி வந்த அரம்பையைப் போன்றவள்; நானமும் பூவும் சாந்தும் நாற - புழுகும் மலரும் குங்குமச் சாந்தும் மணக்க; தானே வந்து அருகு நின்றாள் - தானே வந்து சீவகன் அருகே நின்றாள்.

   (வி - ம்.) நச்சினார்க்கினியர் 'கானத்தின் ஏகுகின்றான்' என்பதைப் பெயராக்கி, 'வனசரிதன்' என்னும் பொருளைக் கொண்டும் 'தானம்' என்பதை முனிவருறைவிடம் என்றும் கூறுவர். இவ்வாறு கொண்டு 'சீவகன் கடிபொழிலிற் சென்றிருந்த அளவிலே, தையலொருத்தி அத்தானத்தில் உறைவான் ஒரு வனசரிதன் கவினைக் கண்டு, தானே வந்து அவனருகே நின்றாள்' என்று முடிபு கூறுவர். செய்யுளமைப்பை நோக்