| நாமகள் இலம்பகம் |
89 |
|
|
இனி, தாணிழற்றங்கிய வையம், அவன் உலகில் வைத்த காதலாலே களிக்கின்ற தென்றுமாம்.
|
|
|
இவற்றால் (மூன்று செய்யுட்களாலும்) தெறலும் அளியும் அழகும் கொடையும் வீரமும் கல்வியும் முறை செய்தலும் கூறினார்.
|
|
|
ஈண்டுத் தேவர் ” தாதையே” எனச் சச்சந்தனுக் கோதியதனையே கம்பநாடர் சிறிது மாற்றித் தயரதன் ”தாயொக்கும் அன்பின்” (4. அரசிய- 4) என்று தங்காப்பியத்து அமைத்துக் கொண்டார்
|
( 130 ) |
| 160 |
தருமன் றண்ணளி யாற்றன தீகையால் |
| |
வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே |
| |
யருமை யாலழ கிற்கணை யைந்துடைத் |
| |
திரும கன்றிரு மாநில மன்னனே. |
|
|
(இ - ள்.) திரு மாநிலம் மன்னன் - திருவையுடைய மாநிலத்தின் மன்னனான சச்சந்தன்; தண் அளியால் தருமன் - (அமிர்தத்தை யொத்தலும் உலகை நிழற்றலும் ஆகிய) தண்ணிய அருளினால் அறக்கடவுளைப் போன்றவன்; தனது ஈகையால் வருணன் - (கலிமாற்றின) கொடையால் வருணனைப் போன்றவன்; உயிர் மாற்றலின் கூற்று- (தேர்த்தொகை மாற்றுமிடத்தால் அழற் சீற்றத்தனாய்) உயிரைப் போக்குதலாற் கூற்றுவனைப் போன்றவன்; அருமையால் வாமன் - (கலைக்கிடனாம்) அருமையால் வாமனைப் போன்றவன்; அழகின் கணை ஐந்துஉடை திருமகன் - (மகளிர்க்கு அணங்காகிய) அழகால் ஐங்கணை யேந்திய திருமகள் மகனான காமனைப் போன்றவன்.
|
|
|
(வி - ம்.) இங்ஙனம் உவமை கூறுதற்குக் கொண்டு கூறினார். எனவே, கூறியது கூறல் அன்றென்க.
|
( 131 ) |
| 161 |
ஏனை மன்னர்த மின்னுயில் செற்றவேற் |
| |
றானை மன்னரிற் ரானிமி லேறனான் |
| |
றேனை மாரியன் னான்றிசை காவலன் |
| |
வானந் தோய்ப்புக ழான்மலி வெய்தினான். |
|
|
(இ - ள்.) ஏனை மன்னர்தம் இன்னுயிர் செற்ற வேல்தானே மன்னரில் தான்இமில் ஏறனான் - மற்றைய (பகை) மன்னரின் இனிய உயிரைப் போக்கிய வேற்படையையுடைய தன் மரபு மன்னர்களில் தான் செருக்கினால் இமிலையுடைய ஏறு போன்றவன்; தேன்மாரி அன்னான் திசை காவலன் - மொழியால் தேன் மலையனையவனாகிய எட்டுத் திக்கிற்கும் அரசனாகிய அவன்; வானம் தோய் புகழால் மலிவு எய்தினான் - வானிற் பொருந்திய புகழாலே மிகுதல் பெற்றான்.
|
|
|
(வி - ம்.) தேனை : ஐ : அசை.
|
( 132 ) |