பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 890 

கின் இப் பொருள் நச்சினார்கினியரது படைப்பென்பது தானே போதரும்.

   இவ்வாறு படைப்புப் பொருள் கூறுதற்கு அவர் கூறுங் காரணம்:

   ”இங்ஙனங் கூறாது சீவகன் கவினைக் கண்டு அவள் எய்தினாளென்று கூறின், மேல் இவற்கு இவள் வேட்கை விளை வித்தலின், இவன் நெஞ்சு தன் தன்மை திரிந்ததனை இவன் தேற்றினான் என்று கூறுவர். அங்ஙனம் கூறவே; மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாற் செய்து கொள்ளும் பாவங்களிற் சிறந்த மனத்தாற் செய்து கொள்ளும் பாவமும் சீவகற்கு எய்திற்றாம் ஆதலானும், உழுவலன்போடு தோன்றிய மகளிரிடத்தல்லது இவற்கு வேட்கை நிகழாதென்பது இத் தொடர் நிலைச் செய்யுட்குக் கருத்தாதலாலும் அது மாறுபடக் கூறிற்றாம் என்றுணர்க” என்பதாம்.

   இவருடைய இக் கருத்து நூலாசிரியர்க் கிருக்குமேல் இங்ஙனம் வேறு பொருள் பயக்க நூலியற்றரென்க.

( 11 )
1568 குறிஞ்சிப்பூங் கோதை போலுங்
  குங்கும முலையி னாட
னிறைந்தபொற் கலாபந் தோன்ற
  நெடுந்துகில் விளிம்பொன் றேந்திச்
செறிந்ததோர் மலரைக் கிள்ளித்
  தெறித்திடாச் சிறிய நோக்கா
நறும்புகைத் தூது விட்டு
  நகைமுகங் கோட்டி நின்றாள்.
 

   (இ - ள்.) குறிஞ்சிப் பூங் கோதை போலும் குங்கும முலையினாள் - குறிஞ்சி மலர்மாலை போன்ற குங்குமம் அணிந்த முலைகளையுடைய அவள்; தன் நிறைந்த பொன் கலாபம் தோன்ற - தன்னுடைய மிகுந்த பொன்னாலியன்ற கலாபம் வெளிப்பட; ஒன்று நெடுந்துகில் விளிம்பு ஏந்தி - ஒரு கையாலே நீண்ட தன் துகிலின் ஓரத்தைத் தாங்கி; செறிந்தது ஓர் மலரைக் கிள்ளித் தெறித்திடா - மற்றைக் கையிலே வேடிக்கையாக ஆங்குச் செறிந்திருந்த ஒரு மலரைக் கிள்ளித் தெறித்து; சிறிய நோக்கா - கடைக்கணித்துப் பார்த்து; நறும்புகைத் தூது விட்டு நகை முகம் கோட்டி நின்றாள் - காற்று வாக்கிலே நின்று நறுமணப் புகையைத் தூதுவிட்டு ஒளி முகத்தைச் சாய்த்து நின்றாள்.

   (வி - ம்.) குறிஞ்சிப் பூ குங்குமத்திற்குவமை. தோன்ற - சிறிதே உடை நெகிழ்தலாலே தெரிய. தெறித்திடா, நோக்கா இவை யிரண்டும் செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்கள்; இவையும், விட்டு, கோட்டி என்பனவும் அடுக்கி, நின்றாள் என முடிந்தன.

( 12 )