| கனகமாலையார் இலம்பகம் |
892 |
|
|
|
மறைந்து நிற்க; எண்திசை மருங்கும் நோக்கி - (இவளுடன் வந்தாருளரோ என) எட்டுத் திசையின் சார்பிலும் பார்த்து (தனியே வந்திருப்பதை அறிந்து) இவள் இயங்கிகொல் என்றான் - இவள் ஓர் இயக்கி போலும் என் றெண்ணினான்.
|
|
(வி - ம்.) அந்நோக்கத்தின்கண் காமக்குறிப்பின்மை கண்டு நடுங்கிச் சோர நிற்ப என்க. எண்டிசை மருங்கு நோக்கி என்றது இவளுடன் கூடவந்தாருளரோ என்று நோக்கி என்பதுபட நின்றது.
|
( 14 ) |
| 1571 |
எண்ணத்தி லியக்கி யென்றே | |
| |
யிருப்பமற் றெழுத லாகா | |
| |
வண்ணப்பூங் கண்க ளம்பா | |
| |
வாணுதற் புருவம் வில்லா | |
| |
வுண்ணிறை யுடைய வெய்வா | |
| |
னுருவச்சா தகத்துக் கேற்பப் | |
| |
பெண்ணலங் கிடந்த பேதை | |
| |
பெண்ணலங் கனிய நின்றாள். | |
|
|
(இ - ள்.) எண்ணத்தில் இயக்கி யென்றே இருப்ப - அவன் தன் கருத்திலே இயக்கி யென்றே எண்ணி இருப்ப ; பெண் நலம் கிடந்த பேதை - பெண்ணின் நலம் தங்கிய பேதையாகிய அவள்; எழுதல் ஆகா வண்ணப் பூங்கண்கள் அம்புஆ - எழுத வியலாத தன் அழகிய மலர்க் கண்கள் அம்பாகவும்; வாள் நுதற் புருவம் வில்லா - ஒளிரும் நெற்றியிற் புருவம் வில்லாகவும்; உள் நிறை உடைய எய்வான் - அவனுடைய மன நிறை கெட எய்வதற்கு; உருவச் சாதகத்திற்கு ஏற்ப - தன் உருவ இயலுக் கேற்றவாறு; பெண் நலம் கனிய நின்றாள் - தன் பெண் அழகு முற்றுப் பெற நின்றாள்.
|
|
(வி - ம்.) எண்ணத்தில் - சீவகன் தன் கருத்தின்கண் என்க. ஓவியத்தில் எழுதவொண்ணாத கண்கள் என்க. அம்பா, வில்லா : இவை ஈற்றிற் ககர யுயிர்மெய் தொக்கு நின்றன.
|
( 15 ) |
| 1572 |
முறுவன்முன் சிறிய தோற்றா | |
| |
முகைநெறித் தனைய வுண்கட் | |
| |
குறுநெறி பயின்ற கூந்தல் | |
| |
குறும்பல்கா லாவிக் கொள்ளாச் | |
| |
சிறுநுதற் புருவ மேற்றாச் | |
| |
சோ்துகிற் றானை சோர | |
| |
வறியுந ராவி போழு | |
| |
மநங்கனைங் கணையு மெய்தாள். | |
|