| கனகமாலையார் இலம்பகம் | 
895  | 
 | 
  | 
|  1576 | 
இன்புகை யார்ந்த விழுதார்மென் பள்ளிமே |   |  
|   | 
லன்புருகு நல்லா ரவர்தோண்மேற் றுஞ்சினார் |   |  
|   | 
தம்புலன்கள் குன்றித் தளரத்தங் காதலா |   |  
|   | 
ரன்புருகு கண்புதைத் தாங்க கல்வர் நெஞ்சே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நெஞ்சே-; இன்புகை ஆர்ந்த இழுது ஆர்மென் பள்ளி மேல் - இனிய அகிற்புகை நிறைந்த, வெண்ணெய் அனைய மென்மை நிறைந்த பள்ளியின் மேல்; அன்பு உருகும் நல்லாரவர் தோள்மேல் துஞ்சினார் - அன்பினால் உருகும் நல்லவராகிய அம் மங்கையரின் தோள் மேலே துயின்றவர்கள்; தம் புலன்கள் குன்றித் தளர - முதுகையாலே தம்முடைய புலன்கள் குன்றித் தளர்வடைந்ததனால்; தம் காதலார் அன்பு உருகு கண் புதைத்து ஆங்கு அகல்வர் - தம் காதல் மகளிர் தம் அன்பினாலுருகிய கண்களைப் புதைத்துக்கொண்டு (அவர்களைப்பராமல்) அங்கிருந்தும் நீங்குவர். 
 | 
| 
    (வி - ம்.) இதனாற் புலன் குறையும் என்றார். இவள் விரும்பப் பெற்றோமே யென்று கூடினார்க்குப் பின் வருவது கூறியவாறு. 
 | 
( 20 ) | 
|  1577 | 
என்பினை நரம்பிற் பின்னி |   |  
|   | 
  யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப் |   |  
|   | 
புன்புறந் தோலைப் போர்த்து |   |  
|   | 
  மயிர்புறம் பொலிய வேய்ந்திட் |   |  
|   | 
டொன்பது வாயி லாக்கி |   |  
|   | 
  யூன்பயில் குரம்பை செய்தான் |   |  
|   | 
மன்பெருந் தச்ச னல்லன் |   |  
|   | 
  மயங்கினார் மருள வென்றான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) உதிரம் தோய்த்து - உதிரத்தைத் தோய்த்து; நரம்பின் என்பினைப் பின்னி - நரம்பினாலே என்பினைக் கட்டி; இறைச்சி மெத்தி - தசையை அப்பி; புன்புறம் தோலைப் போர்த்து - புன்மையான வெளிப்புறம் மறையத் தோலைப் போர்த்து ; புறம் பொலிய மயிர் வேய்ந்திட்டு - அப்புறம் அழகுற மயிராலே மூடி; ஒன்பது வாயில் ஆக்கி - ஒன்பது வாயிலைச் செய்து ; ஊன் பயில் குரம்பை - ஊன் பழகிய குடிலை; மயங்கினார் மருள - அறிவு மாறியவர்கள் மருளுமாறு; மன்பெருந் தச்சன் செயதான் - மிகப் பெரிய தச்சன் இயற்றினான்; நல்லன் - (ஆதலால்) அவன் மிகவும் நல்லன் என்றெண்ணினான். 
 | 
| 
    (வி - ம்.) என்பு எலும்பு. பின்னி - கட்டி. இறைச்சி - தசை. புன்புறம் - புல்லிய வெளிப்பகுதி. குரம்பை - கூடு. தச்சன் என்றது 
 |