| கனகமாலையார் இலம்பகம் |
897 |
|
|
|
(வி - ம்.) இது முதல் மூன்று பாட்டுக்கள் ஒரு தொடர்.
|
|
அவன் : சீவகன். உருகல் செல்லான்: ஒரு சொல். என்று எண்ணி எடுத்து ஓதுகின்றாள் என்க. பண்ணை - மகளிர் விளையாட்டு. மழை - முகில்.
|
( 23 ) |
| 1580 |
மயிலின மிரிய வாங்கோர் | |
| |
மடமயி றழுவிக் கொண்ட | |
| |
வெயிலிளஞ் செல்வன் போல | |
| |
விஞ்சைய னெற்கொண் டேகத் | |
| |
துயிலிய கற்பி னாடன் | |
| |
றுணைவிகண் டிடுவித் திட்டா | |
| |
ளயிலியல் காட்டுள் வீழ்ந்தே | |
| |
னநங்கமா வீணை யென்பேன். | |
|
|
(இ - ள்.) மயில் இனம் இரிய ஆங்கு ஓர் மடம் மயில் தழுவிக் கொண்ட - மயிலின் திரள் சிதைந்து ஓட ஆங்குள்ள ஓர் இளமயிலை எடுத்துக் கொண்ட; வெயில் இளஞ் செல்வன் போல - இளஞாயிறு போல; விஞ்சையன் என்கொண்டு ஏக - அவ்விஞ்சையன் என்னைக் கொண்டு சென்றானாக; துயிலிய கற்பினாள் தன் துணைவி கண்டு இடுவித்திட்டாள் - தங்கிய கற்பினாளாகிய அவன் மனைவி கண்டு என்னை விடுவித்தாள்; அயில் இயல் காட்டுள் வீழ்ந்தேன் - கொடுமை பொருந்திய இக்காட்டிலே வீழ்ந்தேன்; - கொடுமை பொருந்திய இக்காட்டிலே வீழ்ந்தேன்; அநங்கமா வீணை என்பேன் - யான் அநங்கமா வீ¦ணை என்று பெயர் கூறப்படுவேன்.
|
|
(வி - ம்.) மயிலுவமை தோழியர் அஞ்சி ஓடியதற்கு.
|
|
மயிலினம் தோழியர்ககுவமை. மடமயில் என்றது தனக்கே அவள் கூறிக்கொண்டவுவமை. வெயிலிளஞ்செல்வன் - காலை ஞாயிறு. இது விஞ்சையனுக்குவமை. துயிலிய : செய்யிய என்னும் வாய்பாட்டு வினை
|
|
(இ - ள்.) என்று அவன் இருப்ப - என உள்ளத்தைத் தேற்றி அவன் இருக்கும்போது; என் வரவு இசைப்பின் அல்லால் - என்னுடைய வரவைக் கூறினாலன்றி; ஒன்றும் உருகல் செல்லான் என்று - சிறிதும் இரங்கி அருளமாட்டான் என்றெண்ணி; எடுத்து ஓதுகின்றாள் - அவன் கேட்குமாறு கூறுகின்றாள்; வனத்திடை மன்றல் அம் தோழிமாருள் பண்ணை ஆட - ஒரு வனத்திலே மணத்தையுடைய என் தோழிகளினிடையே நான் விளையாடிக்கொண்டிருக்க; குன்றிடைக் குளிர்க்கும் மின்போல் - மலையிடைத் தங்கும் மின்போல; குழாம் மழை முகட்டின் செல்வான் - திரளாகிய முகிலின் மிசை செல்வானானான் (ஒரு விஞ்சையன்).
|