பதிகம் |
9 |
|
'அமிர்தன்ன சாயல்' என்றார். 'சாயல் மென்மை' (தொல் - உரி-27) எனப் பொதுப்படச் சூத்திரஞ் செய்தது ஐம்பொறியானும் நுகரும் மென்மையெல்லாம் அடங்குதற்கு. 'மயில் அன்ன சாயல்' (ஏலாதி-28), 'சாயல் மார்பு' (கலி - 65) என ஒளிக்கும் ஊற்றிற்கும் (பரிசத்திற்கும்) வந்தன. பிறவும் காண்க. சாயல் : (பண்பு) ஆகுபெயர். மறுமையிற் சென்று பெறும் அமுதமும் இவளெனக் கொண்டு மயங்கினமை தோன்ற மீட்டும் 'அமுதாய்' என்றார். 'வாட்கண்' என்புழி வாள் 'கண்' என்பதற்கு வாளா அடைமொழியாக வந்தது எனவுங் கூறலாம்.
|
( 3 ) |
9 |
கல்லார் மணிப்பூ ணவன்காமங் கனைந்து கன்றிச் |
| சொல்லாறு கேளா னனிசூழ்ச்சியிற் றோற்ற வாறும், |
|
புல்லார் புகலப் பொறிமஞ்ஞையிற் றேவி போகிச் |
|
செல்லா றிழுக்கிச் சுடுகாடவள் சேர்ந்த வாறும், |
|
(இ - ள்.) மணிக்கல் ஆர் பூணவன் காமம் கனைந்து கன்றி- மாணிக்கக் கற்கள் பொருந்திய அணிகலனுடைய சச்சந்தன் வேட்கை செறிந்து அதிலே அடிபட்டு; சொல் ஆறு கேளான் - அமைச்சர் சொல்வழியைக் கேளாதவனாய் ; புல்லார் புகலச் சூழ்ச்சியில் நனிதோற்ற ஆறும் - பகைவர் மனம் மகிழ எண்ணத்திலே மிகவும் தோற்றபடியும், தேவி மஞ்ஞைப் பொறியில் போகி - விசயை மயிற் பொறியிலே சென்று ; செல் ஆறு இழுக்கி அவள் சுடுகாடு சேர்ந்த ஆறும் - (வெற்றி முரசு கேட்டு) செல்லும் வழியிலே கலங்கி அவள் சுடுகாட்டினைச் சேர்ந்த படியும்.
|
|
(வி - ம்.) நனி : விசேடித்து வரும் உரிச்சொல். செல் ஆறு இழுக்குதல்: வெற்றி முரசு கேட்டுக் கலங்குதல். 'தேவி போகி இழுக்கிச் சேர்ந்தாள்' என முடிவுழி 'அவள்' என்று கூறவேண்டாமையின், அது தேவியைச் சுட்டாமல், அங்ஙனம் அமுதாயவள் இங்ஙனம் ஆயினாள் எனத் தேவர் இரங்குதலின், முன்னைய கவியை நோக்கித் தகுதிபற்றி வந்தது. இனி, 'சாத்தியவள் வந்தாள்' என்றாற்போலத் , 'தேவியவள்' என வினைக்கு ஒருங்கு இயன்றது என்பாரும் உளர். அது வழக்கிலது என்று மறுக்க.
|
( 4 ) |
10 |
நாளுற்று நம்பி பிறந்தான்றிசை பத்து நந்தத் |
| தோளுற்றொ தெய்வந் துணையாய்த்துயா தீர்த்த வாறுங், |
|
கோளுற்ற கோன்போ லவன்கொண்டு வளர்த்த வாறும் |
|
வாளுற்ற கண்ணாண் மகன்வாழ்கென நோற்ற வாறும், |
|
|
(இ - ள்.) நம்பி நாள் உற்றுத் திசை பத்தும் நந்தப் பிறந்தான் - சீவகன் ஒன்பது திங்களும் நிறைந்து, பத்துத் திக்கினும் உள்ள வல்லுயிர்களும் வளர்தற்காகப் பிறந்தானாக; ஓர் தெய்வம்தோள் உற்றுத் துணையாய்த் துயர் தீர்த்த ஆறும் - ஒரு தெய்வம் கூனியின் உருவாய்த் தன் கை தனக்கு உதவுதல் போலத் தேவிக்கு உதவித் துயர் தீர்த்த படியும்; கோள் உற்ற
|
|
|