நாமகள் இலம்பகம் |
90 |
|
162 |
செல்வற் கின்னணஞ் சேறலிற் றீம்புனன் |
|
மல்கு நீர்விதை யத்தர சன்மக |
|
ளல்லி சேரணங் கிற்கணங் கன்னவள் |
|
வில்லி னீள்புரு வத்தெறி வேற்கணாள். |
|
(இ - ள்.) செல்வற்கு இன்னணம் சேறலின் - அரசனுக்கு இவ்வாறு நல்வினை நடத்தலாலே; தீம்புனல் மல்குநீர் விதையத்து அரசன் மகள் - (இதற்குத்தக) இனிய நீர்வளம்மிக்க இயல்பையுடைய விதையத்து மன்னன் மகள்; அல்லிசேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள் - தாமரையில் வாழும் திருமகளுக்கு ஒரு திருமகள் போன்றவள்; வில்லின் நீள் புருவத்து எறி வேறிகணாள் - வில்லனைய நீண்ட புருவத்தினையும் எறியும் வேலனைய கண்ணையும் உடையவள்;
|
|
(வி - ம்.) அல்லி: அகவிதழ் ; சினையாகு பெயராகத் தாமரை மலரை உணர்த்தியது.
|
|
புனலினது வளப்பம் பொருந்திய நீர்மையையுடைய விதையம்; தண்ணீரும் விளைவிக்கும் நீருமாம். திருவிற்கு ஒரு திருவன்னவள்; இல்பொருள்(உவமை.)
|
|
சச்சந்தன் உயிர்நீத்தமைக்குக் காரணமாதல்பற்றி ”வில்லின் நீள்புருவத்து எறிவேற் கணாள்” என்று கொல்படைகளை உவமை ஓதினர்.
|
( 133 ) |
163 |
உருவுஞ் சாயலு மொப்ப வுரைப்பதற் |
|
கரிய வாயினு மவ்வளைத் தோளிகட் |
|
பெருகு காரிகை பேசுவல் பெண்ணணங் |
|
கரிய தேவரு மேத்தரு நீரளே. |
|
(இ - ள்.) பெண் அணங்கு அரிய தேவரும் ஏத்து அருநீரள் - (அவள்) இவ்வுலகிற் பெண்ணால் வருத்துதற்கரிய தேவரும் புகழ்தற்கரிய பண்பினாள் ; உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு அரிய ஆயினும் - (அவளுடைய) வடிவும் மென்மையும் இத்தன்மையவெனப் பொருந்த உவமை கூறுதற்கு அரிய எனினும்; அவ் வளைத்தோளிகண் பெருகு காரிகை பேசுவல் - அழகிய வளைத்தோளியின் அழகைச் சிறிது கூறுவேன்.
|
|
(வி - ம்.) அதுமேற் கூறுகின்றார். உருவுஞ் சாயலுமாகிய காரிகை என்க.
|
|
அவை கண்ணானும் மனத்தானும் நுகரப்படுவனவேயன்றிச் சொல்லாற் கூறும் எளிமையுடையனவல்ல வென்பார் ” உரைப்பதற்கு அரிய வாயினும் ” என்றும், அங்ஙனமாயினும் எம்மாலியன்றவளவிற் கூறுவேம் என்பார் ”பேசுவல்” என்றும் கூறினார். அக்குறை மக்கட் பிறப்பினையுடைய எமக்கே உரியது மன்றென்பார் ”தேவரும் ஏத்தரும் நீரள்” என்றார்.
|
( 134 ) |