பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 900 

1584 விழுக்கொடு வெண்ணஞ் சல்லா
  வுகிர்மயி ருமிழ்கட் பீளைப்
புழுப்பயில் குரம்பை பொல்லாத்
  தடிதடித் கீழ்ந்த போழ்தில்
விழித்தியார் நோக்கு கிற்பார்
  பிள்ளையார் கண்ணுட் காக்கை
கொழிப்பாரும் பொன்னிற் றோன்றுங்
  கொள்கைத்தாற் கொடியே யென்றான்.

   (இ - ள்.) கொடியே! - கொடி போன்றவளே!; விழுக்கொடு வெண் நஞ்சு அல்லா உகிர் மயிர் கண் உமிழ் பீளைப் பொல்லாத்தடிப் புழுப்பயில் குரம்பை - விழுக்கும் வெள்ளையான நிணமும் இவை ஒழிந்த உகிரும் மயிரும் கண் உமிழும் பீளையும் பொல்லாத ஊனும் புழுவும் பயில்கின்ற இவ்வுடம்பு; தடி கீழ்ந்த போதில் யார் விழித்து நோக்கு கிற்பார்? - ஊனைப் பிளந்த போதில் எவர் கண்ணை விழித்துப் பார்க்கும் அருவருப்பிலார்?; பிள்ளையார் கண்ணுள் காக்கை கொழிப்ப அரும் பொன்னின் தோன்றும் கொள்கைத்து என்றான் - கரிக்குருவியார் கண்ணிற்குக் காக்கை கொழிக்க அருமையான பொன்போல் தோன்றும் கொள்கையுடைத் தாயிற்று என்றான்.

   (வி - ம்.) 'கரிக் குருவியார் கண்ணுக்குக் காக்கை பொன் ஒத்துத் தோன்றும்' என்பது ஒரு பழமொழி.

   விழுக்கும் வெண்ணஞ்சும் ஊன்வகை. வெண்ணஞ்சு - நிணமுமாம். பிள்ளையார் - கரிக்குருவி. ”வெண்ணஞ்சு என்பதும்” பாடம்.

( 28 )
1585 உருவமென் றுரைத்தி யாயி
  னிறைந்ததோற் றுருத்தி தன்னைப்
புருவமுங் கண்ணு மூக்கும்
  புலப்பட வெழுதி வைத்தாற்
கருதுவ தங்கொன் றுண்டோ
  காப்பியக் கவிகள் காம
வெரியெழ விகற்பித் திட்டா
  ரிறைச்சிப்போ ரிதனை யென்றான்.

   (இ - ள்.) உருவம் என்று உரைத்தியாயின் - உள்ளொழியப் புறத்தின் வடிவு நன்றெனக் கூறினையாயின்; நிறைந்த தோல் துருத்தி தன்னை - முற் கூறியவை நிறைந்ததொரு தோல் துருத்தியை; புருவமும் கண்ணும் மூக்கும் புலப்பட எழுதி