பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 902 

1587 வண்ணத் திங்கண் மதிமுகத்த
  வாளோ கருங்க யல்களோ
வுண்ணுங் கூற்றோ வொளிவேலோ
  போதோ வுணர்க லேனாற்
பண்ணின் றீஞ்சொலாய் படாமுலைப்
  பாவாய் கொடியே பாங்கி
ணுண்ணுந் தேனே யமிர்தே
  யென்னின் னுயிரே யெங்கணாயோ.

   (இ - ள்.) பண்ணின் தீ சொலாய்! - இசையனைய இனிய மொழியாய்!; படாமுலைப் பாவாய்! - சாயாத முலையை யுடைய பாவையே!; கொடியே! - கொடியே!; பாங்கின் உண்ணும் தேனே!; - தகுதியான பருகுந் தேனே!; அமிர்தே! - அமிழ்தே!; என் இன் உயிரே! - என் இனிய உயிரே!; எங்கணாயோ! - எங்குள்ளாயோ?; வண்ணம் திங்கள் மதி முகத்த - அழகிய திங்களும் போற்றும் முகத்திலுள்ளவை; வாளோ? கருங்கயல்களோ? உண்ணும் கூற்றோ? ஒளிவேலோ? போதோ - வாளோ? கரிய கயல்களோ? உயிரைப் பருகும் கூற்றுவனோ? ஒளி தரும்வேலோ! மலரோ!; உணர்கலேன் - அறியேன்.

   (வி - ம்.) 'என்' என்பது வினா என்பர் நச்சினார்க்கினியர், எங்கணாயோ!: ஓ! : வியப்பு.

( 31 )

   மதிமுகத்த - வினைத்தொகை. மதியாநின்ற முகத்திலுள்ளன என்க. உயிரையுண்ணும் கூற்றோ என்க.

1588 இலவம் போதே ரெழிற்றகைய
  சீறடிக ளஞ்சி யொல்கிப்
புலவன் சித்தி ரித்த
  பொற்சிலம்பு நகப்பூ நிலத்துமே
லுலவும் போழ்து மென்னாவி
  மலர்மேன் மிதித்தொ துங்குவாய்
கலவ மஞ்ஞை யனையாய்
  கட்காத லொழிகல் லேனால்.

   (இ - ள்.) கலவ மஞ்ஞை அனையாய் - கலவ மயில் போன்றாய்!; இலவம்போது ஏர் எழில் தகைய சீறடிகள் அஞ்சி ஒல்கி - இலவ மலரனைய அழகு பொருந்திய சிற்றடிகள் நடுங்க அசைந்து; புலவன் சித்திரித்த பொன் வேலை சிலம்பு நக - பொன் வேலை செய்யும் அறிஞன் அமைத்த பொற் சிலம்பு ஒலிக்க; பூ நிலத்து மேல் உலவும் போழ்தும் - அழகிய தரைமிசை நீ உலவும் பொழுதும்;