| கனகமாலையார் இலம்பகம் |
903 |
|
|
|
என் ஆவி! மலர்மேல் மிதித்து ஒதுங்குவாய் - (அந் நிலத்தில் அன்றி) என் உயிரே! என் உள்ள மலர்மேல் மிதித்துச் செல்வாய்; கண் காதல் ஒழிகல்லேன் - நின்னிடத்துள்ள அன்பினின்றும் நீங்குமாற்றலிலேன்.
|
|
(வி - ம்.) இலவம்போது ஏர்எழில் என்புழி ஏர் உவமவுருபு. புலவன் - ஈண்டுக் கம்மியப் புலமையுடைய பொற்கொல்லன். சிலம்பொலி சிரிப்பொலி போறலின பொற்சிலம்பு நக என்றார். பூநிலம் - மலர் பரப்பிய நிலம். கலவ மஞ்ஞை - தோகை மயிர்.
|
( 32 ) |
| 1589 |
பணிசெ யாயத்துப் பந்தாடு | |
| |
கின்றாயைக் கண்டு மாழ்கிப் | |
| |
பிணிசெய் நோயேன் யான்கிடப் | |
| |
பப்பிறர் வாயது கேட்டலுந் | |
| |
துணிக போது மென விடுத்தாய் | |
| |
போந்தேன் றுயரு ழப்பநீ | |
| |
மணிசெய் மேகலை யாய்மாற் | |
| |
றந்தாராய் மறைந்தொ ழிதியோ. | |
|
|
(இ - ள்.) பணி செய் ஆயத்துப் பந்தாடுகின்றாயைக் கண்டு மாழ்கி - ஏவல் புரியும் பணிமகளிருடன் பந்தாடும் நின்னைக் கண்டு மயங்கி; பிணி செய் நோயேன் யான் கிடப்ப - பிணித்தலையுடைய நோயை உடையேனாய் நான் அயர்ந்து கிடக்க; பிறர் வாய் அது கேட்டலும் - மற்றோர் வாயிலாக அதனை நீ கேட்டவுடன்; துணிக! போதும்! என விடுத்தாய்! - துணிவு கொள்க! யாம் உடன் செல்வேம்! என்று கூறி வர விட்டாய்; மணி செய் மேகலையாய்! - மணிகளாற் செய்த மேகலையுடையாய்!; மாற்றம் தாராய் மறைந்து ஒழிதியோ! - மறுமொழி கூறாமல் மறைந்து போகின்றனையோ!
|
|
(வி - ம்.) ஆயம் - மகளிர் குழு. மாழ்கி - மயங்கி, பிணிசெய் நோய் - பிணித்தலைச் செய்யும் நோய். அது - அந்த நிலைமையினை. ”உரைத்தாய்” என்பதும் பாடம்.
|
( 33 ) |
| 1590 |
இயக்கி நின்னோ டிணையொக்கு | |
| |
மென்று நலஞ்செ குப்பான் | |
| |
மயக்கிக் கொண்டு போய்வைத்தா | |
| |
யென்மா தரைத்தந் தருளுநீ | |
| |
நயப்ப வெல்லாந் தருவலெனத் | |
| |
தொழுது நல்லி யானைதன் | |
| |
வயப்பிடி கெடுத்து மாழாந்த | |
| |
தொப்ப மதிம யங்கினான். | |
|