பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 904 

   (இ - ள்.) இயக்கி! - இயக்கியே!; நின்னோடு இணை ஒக்கும் என்று என் மாதரை நலம் செகுப்பான்.- நின்னுடன் இணைத்தற்கண் ஒப்பாள் என்று கருதி என் காதலியை அவள் நலத்தைக் கெடுத்தற்கு; மயக்கிக் கொண்டு போய் வைத்தாய் - அறிவைக் கலக்கிக் கொண்டுபோய் மறைய வைத்தாய்; நீ தந்தருள் - நீ அவளை என்னிடந் திருப்பித் தருக; நயப்ப எல்லாம் தருவல் எனத் தொழுது - (தந்தால்) நீ விரும்பிய யாவற்றையும் நல்கு. வேன் என்று வணங்கி; நல்லி யானை தன் வயப்பிடியைக் கெடுத்து மாழாந்தது ஒப்ப மதி மயங்கினான் - அழகிய களிறு தன் வெற்றியுறும் பிடியை இழந்து மயங்கினாற் போல அறிவு கலங்கினான்.

   (வி - ம்.) தாராய் : முற்றெச்சம். ஓ : வியப்பு

   இயக்கி - விளி. இணைஒக்கும் - ஒப்பிடுதற்கு ஒப்பள். செகுப்பான் : வினையெச்சம். நயப்ப : பலவறிசொல். தருவல் : தன்மை ஒருமை வினைமுற்று.

( 34 )
1591 மல்லற் றெல்வ ளத்து
  மத்திமநன் னாட்டுவண் டாமரை
புல்லும் பேரூர்ப் புகழ்த்தத்தன்
  காதற் சினதத் தைக்குஞ்
செல்வநா மற்குஞ் சித்திரமா
  மாலைக் குஞ்சுற் றத்தார்க்கு
மல்லல் செய்தே னவட் சென்றா
  மல்லல் செய்தே னவட் சென்றா

   (இ - ள்.) மல்லல் தொல் வளத்து மத்திம நல்நாட்டு - வளமிகும் பழமையான செல்வத்தையுடைய மத்திம நாட்டிலே; வண் தாமரை புல்லும் பேரூர் - பதுமபுரம் என்னும் பேரூரிலே; புகழ்த்தத்தன் காதல் சின தத்தைக்கும் - என் தந்தை கீர்த்தி தத்தனுக்கும் அவன் காதல் மனைவியான என் அன்னை சினதத்தைக்கும்; செல்வ நாமற்கும் சித்திரமா மாலைக்கும் - என்மாமன் சீமானுக்கும் என் மாமி சித்திர மாலைக்கும்; சுற்றத் தார்க்கும் - மற்றைய உறவினர்க்கும்; அல்லல் செய்தேன் - யான் துன்பஞ் செய்தேன்; அவண் சென்றால் - யான் அங்கே சென்றால்; என் உரைக்கேன்? - என் மொழிவேன்?; என் செய்கேன்? - யாது புரிவேன்!

   (வி - ம்.) மல்லல் - வளம். வளம் - செல்வம். தாமரை புல்லும், பேரூர் - பதுமபுரம் என்னும் பேரையுடைய ஊர். புகழ்த்தத்தன் - கீர்த்திதத்தன். இவன் பவதத்தன் தந்தை. சினதத்தை பவத்தத்தன் தாய். செல்வ நாமன் - சீமான். இவன் பவதத்தன் மாமன். சித்திரமா