பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 906 

அழகன் சொல்லும் - நெகிழ்ந்து அழுகின்ற உடலழகனாகிய பவதத்தன் மொழியையும்; அணிசெய் கோதை காமமும் - அணி பொருந்திய மலர்மலையாளின் காமத்தையும்; முழவுத்தோளான் கண்டும் கேட்டும் முறுவலித்து - முழவனைய தோளானாகிய சீவகன் பார்த்தும் கேட்டும் நகைத்து; இங்கே நீ இரு என்று இழையச் சொல்லி - நீ இங்கேயே இரு என்று அவள் பொருந்தக் கூறி; இளையான் இளையானை எய்தினான் - சீவகன் பவதத்தனை நெருங்கினான்.

   (வி - ம்.) தன்மேற் காமுற்றவளை நன்னெறிப்படுத்த விரும்பிய சீவகன் அவள் மனம் பொருந்த இன்மொழி கூறிவந்தான், 'நயம்பட வுரைத்த' லின் நயமுணர்ந்தானாகையால்.

   நச்சினார்க்கினியர் தாம் படைத்த வனசரிதனை, 'இரு' என இழையச் சொல்லிச் சீவகன் சென்றான் என்பர். முன்னர் 1567 ஆஞ் செய்யுளில் தானம் என்பதனை முனிவருறைவிடமாக்கி அங்கேயிருந்தான் சீவகன் என்றும், கானத்தினேகுகின்றான் ஆகிய வனசரிதன் கவினை அநங்கமாலை கண்டு காமுற்றுக் காமத்தை மிகுவிக்கும் மொழிகளைக் கூறிக் குறிப்புக்களைக் காட்டி நின்றதையும் அவன் அவளுக்கு நன்னெறி புகன்றதையும் பவதத்தன் அவளைத் தேடிவந்ததையும் கண்டு பவதத்தனுக்கு நன்னெறி புகட்ட வந்தான் என்று இதுகாறும் உரையை அமைத்தார். ஆனால், இதுவரை வனசரிதனையும் சீவகனையும் ஓரிடத்தில் இருத்திவனசரிதன் சீவகனை விருந்தினனாக ஏற்றதாக ஓரிடத்திலும் உரைத்திலர். இச் செய்யுளுக்கு விளக்கங் கூறுமுகத்தான் அவற்றை அமைக்கின்றார். அவர் கூறுவது:-

   தோளான் - இவர்கள் செய்தியைக் கண்டிருந்த சீவகன் 'இழையச்சொல்லி' என்றது - தாமுறைவிடத்தே வந்தார்க்குத் தாம் நுகர்வனவற்றைக் கொடுத்துப் பேணி விடுத்தல் வனசரிதர்க் கியல்பாகலின், சீவகன் போக்கொருப்பட்டமை கண்டு. அவ் வனசரிதனும், 'யான் நுகர்வனவற்றை நீயும் நுகர்ந்து வழிவரல் வருத்தந் தீர்ந்து ஏகுவாயாக' என்றாற்கு, அவனும் தனக்கு அவ் வருத்த மின்மையை அவன் மனம் பொருந்தச்சொல்லி என்றவாறு. 'ஈங்கேயிரு' என்றது - எப்போதும் இப்படியே மனத்தைச் சென்ற இடத்தாற் செல்லவிடாதே (குளற். 422) விலக்கியிருக்க என்றவாறு. ஆங்கு உவம உருபு ஆயினமையின் 'ஈங்கு' என்பதும் உவம உருபாம் புறனடையால்; 'இவ்விடத்தே இரு' என்று உபசாரமுமாம். சீவகன் அவளை இங்கே இரு என்று பொருந்தக் கூறல் அவற்கு இயையாமை உணர்க.

   இவ்வாறு தாம் படைத்துக்கொண்ட வனசரிதனுக்கு இச் செய்யுளில் இடமளிக்கின்றார்.

( 37 )
1594 என்னை கேளீ ரென்னுற்றீ
  ரென்ன பெயா¦ ரென்றாற்குப்
பொன்னங் குன்றிற் பொலிந்ததோ
  ணம்பி யொருபொற் பூங்கொடி