| கனகமாலையார் இலம்பகம் |
907 |
|
|
| 1594 |
யென்னு நீராளை யீங்கே | |
| |
கெடுத்தே னென்பா வத்தாற் | |
| |
பன்னூற் கேள்வி யுடையேன்யான் | |
| |
பவதத்த னென்பே னென்றான். | |
|
|
(இ - ள்.) கேளீர்! - நண்பரே!; என் உற்றீர் என்னை? என்ன பெயரீர்? என்றாற்கு - நீர் என்னவருத்தம் அடைந்தீர்? அதற்குக் காரணம் என்னை ? நும்பெயர் என்னை? என்ற சீவகனை நோக்கி; பொன் அம் குன்றின்பொலிந்த தோள் நம்பி! - பொன்னாகிய அழகிய குன்றைப்போல அழகுற்ற தோளையுடைய நம்பியே!; ஒரு பொன் பூங்கொடி என்னும் நீராளை என் பாவத்தால் ஈங்கே கெடுத்தேன் - ஒரு பொற்கொடியே என்னும் பண்பினாளை என் வினையினால் ஈங்கே போக்கடித்தேன்; யான் பல்நூல் கேள்வியுடையேன் - யான் பலநூலைக் கேட்ட கேள்வியினை உடையேன், பவதத்தன் என்பேன் என்றான் - பவதத்தன் என்னும் பெயருரையேன் என்றான்.
|
|
(வி - ம்.) கேளீர் என்உற்றீர் என்னை? என மாறுக. என்றாற்கு - என்று வினவிய சீவகனுக்கு. பொன்னங்குன்று என்புழி. அம் சாரியையுமாம். நம்பி : விளி. நீராள் - தன்மையுடையாள், என் பாவத்தால் ஈங்கே கெடுத்தேன் என மாறுக.
|
( 38 ) |
வேறு
|
| 1595 |
கைப்பொருள் கொடுத்துங் கற்றல் | |
| |
கற்றபின் கண்ணு மாகு | |
| |
மெய்ப்பொருள் விளைக்கு நெஞ்சின் | |
| |
மெலிவிற்கோர் துணையு மாகும் | |
| |
பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம் | |
| |
புகழுமாந் துணைவி யாக்கு | |
| |
மிப்பொரு ளெய்தி நின்றீ | |
| |
ரிரங்குவ தென்னை யென்றான். | |
|
|
(இ - ள்.) கைப்பொருள் கொடுத்தும் கற்றல் - (இடுக்கணுக்கு தவுமாறு) கையில் வைத்திருக்கும் பொருளைக் கொடுத்தாயினும் கற்க; கற்றபின் கண்ணும் ஆகும் - அவ்வாறு கற்ற பிறகு அது அகக்கண்ணும் ஆகும்; மெய்ப்பொருள் விளைக்கும் - உண்மையான பொருளைத் தரும்; நெஞ்சின் மெலிவிற்கு ஓர் துணையும் ஆகும் - உள்ளம் மெலிந்தால் உறுதுணையும் ஆம்; பிற பொய்ப்பொருள் - மற்றவை பொய்யான பொருள்களாகும்; பொன் ஆம் - கல்விப்பொருளே செல்வப் பொருளுமாம்; புகழும்
|