பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 909 

1597 மெண்ணிப்பத் தங்கை யிட்டா
  லிந்திரன் மகளு மாங்கே
வெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போன்
  மெலிந்துபின் னிற்கு மன்றே.

   (இ - ள்.) பெண் எனப்படுவ கேள் - பெண் என்று கூறப்படுவனவற்றின் இயல்பைக் கேள்; பீடுஇல - மனவலியுடைய அல்ல; பிறப்பு நோக்கா - குடிப்பிறப்புக் கெடுமென்று பாரா; உள்நிறை உடைய அல்ல - உள்ளத்திலே நிறையை உடையனவல்ல; ஒராயிரம் மனத்த ஆகும் - ஆயிரம் முகமாக எழும் மனத்தாவம்; எண்ணிப் பத்து அங்கை இட்டால் - எண்ணிப் பாத்துப் பொருளை அகங்கையிலே வைத்துவிட்டால்; இந்திரன் மகளும் - பொருட்குறையில்லாத இந்திரன் மகளேயாயினும்; ஆங்கே வெண்ணெய்க் குன்று எரியுற்றாற்போல் மெலிந்து பின் நிற்கும் - (பொருள் பெற்ற) அங்கேயே வெண்ணெய் மலை எரியினால் தாக்கப்பெற்றாற் போல உருகி அவர் பின்னே நிற்கும்.

   (வி - ம்.) இழிவு தோன்ற அஃறிணை வாய்பாட்டாற் கூறினான். பீடு ஈண்டு மனத்திண்மையின் மேனின்றது. பிறப்பு - ஈண்டு நற்குடிப் பிறப்பு என்பது படநின்றது. நிறை - நெஞ்சத்தை ஒரு நிலைக்கண் நிறுத்தும் வன்மை. ஓராயிரம் என்றது மிகுதிக்கோர் எண் குறித்தபடியாம். பத்தென்றது சிறுமைக்கோர் எண் குறித்தவாறு. இந்திரன் மகளும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. எரி - நெருப்பு.

( 41 )

1598 சாமெனிற் சாத னோத
  றன்னவன் றணந்த காலைப்
பூமனும் புனைத லின்றிப்
  பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை யென்றுஞ் சொல்லார்
  கணவற்கை தொழுது வாழ்வார்
தேமலர்த் திருவோ டொப்பார்
  சோ்ந்தவன் செல்ல றீர்ப்பார்.

   (இ - ள்.) சாம் எனின் சாதல் நோதல் - கணவன் சாகிற் சாதலும்; நோவின் நோதலும் உடையராய்; தன்னவன் தணந்த காலை - கணவன் நீங்கினால்; மனும் பூப்புனைதலின்றிப் பொற்புடன் புலம்ப வைகி - மிகவும் மலரணிதலும் இன்றித் தானும் அழகும் தனித்துத் தங்கி; காமன் என்றும் சொல்லார் - காமன் என்று பெயரும் கூறாராய்; கணவன் கைதொழுது வாழ்வார் - கணவனையே வணங்கி வாழும் மங்கையர்; தேன்மலர்த் திருவோடு ஒப்பார் - அவனுக்குத் தாமரை மலரில் வாழும் திருமகளைப்