நாமகள் இலம்பகம் |
91 |
|
164 |
எண்ணெயு நானமு மிவைமூழ்கி இருடிருக்கிட் |
|
டொண்ணறுந் துகிற்கிழி பொதிந்துறை கழித்தனபோற் |
|
கண்ணிருண்டு நெறிமல்கிக் கடைகுழன்ற கருங்குழல்கள் |
|
வண்ணப்போ தருச்சித்து மகிழ்வானாத் தகையவே. |
|
(இ - ள்.) எண்ணெயும் நானமும் இவை மூழ்கி - எண்ணெயும் புழுகும் என்னும் இவற்றிலே முழுகி; கடை குழன்ற கருங்குழல்கள் - நுனி சுருண்ட கரிய கூந்தல்கள்; இருள் திருக்கிட்டு - இருளைப் பிடித்து நீள முறுக்கி (அறல்படப் பிடித்து); ஒள் நறுந்துகில் கிழிபொதிந்து உறை கழித்தனபோல் - ஒளி பொருந்திய நல்ல துகிலாகிய உறையிலே பொதிந்து வைத்துப் பிறகு அதனை வாங்கப்பட்டவைபோல்; கண் இருண்டு நெறிமல்கி - (பார்ப்பவர்) கண்கள் இருள நெளிவு மிகுந்து; வண்ணப் போது அருச்சித்து - சேடியர் மலரைக்கெண்டு வழிபட்டாலும்; மகிழ்வு ஆனாத் தகைய - வருந்துந் தன்மைய.
|
|
(வி - ம்.) இருண்டு - இருள. குழல், மயிர் மாத்திரையாய் ஐவகையையும் உணர்த்தலிற் பன்மை கூறினார்.
|
|
கண் - இடமாக்கி, கருங்குழல் - கொடிய குழல் என்றும் ஆம். குழன்றும் பாடம்.
|
( 135 ) |
165 |
குழவிக்கோட் டிளம்பிறையுங் குளிர்மதியுங் கூடினபோ |
|
லழகுகொள் சிறுநுதலு மணிவட்ட மதிமுகமுந் |
|
தொழுதாற்கு வரங்கொடுக்குந் தொண்டைவாய்த் தூமுறுவ |
|
லொழுகுபொற் கொடிமூக்கு முருப்பசியை யுருக்குமே. |
|
(இ - ள்.) குழவிக்கோட்டு இளம்பிறையும் குளிர்மதியும் கூடினபோல் - குழவிப் பருவத்து ஒரு கலையை உடையதாய்ப் பின்பு இளம்பருவத்தே நின்ற பிறையும் குளிர்ந்த திங்களும் கூடினபோல; அழகுகொள் சிறு நுதலும் அணிவட்ட மதிமுகமும் - அழகிய சிறிய நெற்றியும் அணிமிகும் வட்டமான மதிப்புறும் முகமும்; ஒழுகுபொற் கொடிமூக்கும் - வளருகின்ற பொலிவினையுடைய நீண்ட மூக்கும்; தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய் - தொழுத கணவனுக்கு வாம் கொடுக்கும் கொவ்வைக் கனியனைய வாயும்; தூமுறுவல் - தூய பற்களும் ; உருப்பசியை உருக்கும் - உருப்பசியையும் மயக்கும்.
|
|
(வி - ம்.) இளமை - ஈண்டுக் குழவிப்பருவம் ஒழிந்ததன் மேற்று. 'இளமையும் தருவதோ' (கலி. 15) 'மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் -பசுவெண்டிங்கள் தோன்றி யாங்குக் - கதுப்பயல் விளங்குஞ் சிறு நுதல்' (குறுந். 129) என்றார் பிறரும்.
|
|