| கனகமாலையார் இலம்பகம் |
914 |
|
|
|
(வி - ம்.) கருவி - கைத்தளமென்னும் ஒரு போர்க்கருவி. இது தேனடைக்குவமை. கருவி - தொகுதியுமாம். கலை - ஆண் குரங்கு.
|
( 50 ) |
| 1607 |
வெங்க திர்க்கட வுள்வியன் றோ்வரைத் | |
| |
தங்கு சந்தனக் கோட்டிடைப் பட்டெனப் | |
| |
பொங்கு மான்குளம் பிற்குடை பொற்றுகண் | |
| |
மங்கு லாய்த்திசை யாவையு மல்கின்றே | |
|
|
(இ - ள்.) வரைத் தங்கு சந்தனக் கோட்டிடை - வரையில் தங்கிய சந்தனக் கோட்டிடையிலே; வெங்கதிர்க் கடவுள் வியன்தேர் பட்டென - ஞாயிற்றின் தேர் அகப்பட்டதாக; பொங்கும் மான் குளம்பின் குடை பொன் துகள் - தாவும் அத் தேரிற் பூண்ட குதிரைகள் (தம் அடியை ஊன்றி அத் தேரை இழுத்துச் செல்லும்போது) குளம்பினாலே குடைந்த பொன் துகள்; மங்குலாய்த் திசை யாவையும் மல்கின்றே - இருளாகத் திசைகள் எங்கும் நிறைந்தது.
|
|
(வி - ம்.) வெங்கதிர்க் கடவுள் - ஞாயிறு. வரை - மலை. கோடு - கொம்பு. பொங்குமான் - தாவுங்குதிரை. மங்குல் - இருள். மல்கின்று - மல்கிற்று; நிறைந்தது.
|
( 51 ) |
| 1608 |
சுனைய நீலமுஞ் சுள்ளியுஞ் சூழ்மலர் | |
| |
நனைய நாகமுங் கோங்கமு நாறிணர்ச் | |
| |
சினைய சண்பகம் வேங்கையோ டேற்றுபு | |
| |
முனைவன் மேற்றுதி முற்றெடுத் தோதினான். | |
|
|
(இ - ள்.) சுனைய நீலமும் - சுனையிடத்தனவாகிய நீல மலரும்; சுள்ளியும் - மராமர மலரும்; சூழ்மலர் நனைய நாகமும் - சூழ்ந்த மலரின் தேனையுடைய நாகமலரும்; கோங்கமும் - கோங்கமலரும்; நாறு இணர்ச் சினைய சண்பகம் - மணமிகும் பூங்கொத்துக்களையும் கிளைகளையும் உடைய சண்பகமலரும்; வேங்கையோடு - வேங்கை மலருடன்; ஏற்றுபு - அருகன் திருவடியில் இட்டு; முனைவன்மேல் துதி முற்று எடுத்து ஓதினான் - அருகன்மேல் உள்ள வாழ்த்துக்களை முழுக்க எடுத்து வாழ்த்தினான்.
|
|
(வி - ம்.) 'நாறிணர்க் கோங்கம்' என இயைப்பர் நச்சினார்க்கினியர். 'முற்றெடுத்து' என்பதற்கு மிடறுள்ள அளவும் எடுத்து என்றும் ஆம்.
|
( 52 ) |
| 1609 |
முனிமை முகடாய மூவா முதல்வன் | |
| |
றனிமைத் தலைமை தனதுதா னென்ப | |
| |
தனிமைத் தலைமை தனதுதா னென்றாற் | |
| |
பனிமலர்தூய் நின்று பழிச்சாவா றென்னே. | |
|