| கனகமாலையார் இலம்பகம் |
915 |
|
|
|
(இ - ள்.) முனிமை முகடுஆய - முனித்தன்மைக்கு மேலாகிய; தனிமைத் தலைமை - ஒப்பில்லாத முதன்மை; மூவா முதல்வன் தனது தான் என்ப - கெடாத முதல்வனுடையதே என்பர்; தனிமைத் தலைமை தனதுதான் என்றால் - அவ்வாறு கூறுதலால்; பனிமலர் தூய் நின்று பழிச்சா ஆறு என்னே! - அவனை உலகம் தண்மலர் இட்டு நின்று வாழ்த்தாதிருத்தல் என் கொல்? (அறியாமையே).
|
|
(வி - ம்.) முனிமை - குணப் பண்பு.
|
|
முனிமை - முனிவர் தன்மை. முகடு - உச்சி. ஈண்டு மேன்மை மேனின்றது. தனிமை - ஒப்பின்மை. பழிச்சுதல் - ஏத்துதல்.
|
( 53 ) |
| 1610 |
மலரேந்து சேவடிய மாலென்ப மாலா | |
| |
லலரேந்தி யஞ்சலிசெய் தஞ்சப் படுவா | |
| |
னலரேந்தி யஞ்சலிசெய் தஞ்சப் படுமே | |
| |
லிலரே மலரெனினு மேத்தாவா றென்னே. | |
|
|
(இ - ள்.) மாலால் அலர் ஏந்தி அஞ்சப்படுவான் - இந்திரனால் மலர்தூவி வணங்கி மதிக்கப்படுவான்; மலர் ஏந்து சேவடியமால் என்ப - மலர்தான் ஏந்தின சிவந்த அடிகளையுடைய அருகன் என்பர்; அலர் ஏந்தி அஞ்சலி செய்து அஞ்சப்படுமேல் - அவ்வாறு அருகன் வணங்கி மதிக்கப் படுவானேல்; மலர் இலரெனினும் ஏத்தாவாறு என்னே! - உலகத்தார் மலர் இல்லாரெனினும் வாழ்த்தாதிருப்பது அறியாமையே அன்றோ!
|
|
(வி - ம்.) பூமேனடந்தான் என்பதுபற்றி மலரேந்து சேவடியமால் என்ப என்றான். மால் ஈண்டு அருகன். மாலால் என்புழி மால் இந்திரன். அஞ்சலி செய்தல் - தொழுதல். மலர் இலர் எனினும் எனமாறுக.
|
( 54 ) |
| 1611 |
களிசோ் கணையுடைய காமனையுங் காய்ந்த | |
| |
வளிசே ரறவாழி யண்ணலிவ னென்ப | |
| |
ரளிசே ரறவாழி யண்ண லிவனேல் | |
| |
விளியாக் குணத்துதிநாம் வித்தாவா றென்னே. | |
|
|
(இ - ள்.) களிசேர்கணை உடைய காமனையும் காய்ந்த - களிப்பூட்டும் அம் பேந்திய காமனை வென்ற; அளிசேர் அறஆழி அண்ணல் இவன் என்பர் - அருள்பொருந்திய அறவாழியையுடைய தலைவன் இவனே என்பர்; அளிசேர் அறஆழி அண்ணல் இவனேல் - அத்தகைய அண்ணல் இவனெனின்; விளியாக் குணத்துதி நாம் வித்தாவாறு என்னே! - அப்பெருமானுடைய கெடாத பண்புகளைப் போற்றுதலை நாம் பரப்பாதிருப்பது அறியாமையே அன்றோ?
|