| கனகமாலையார் இலம்பகம் |
918 |
|
|
|
(வி - ம்.) தலை அடுத்து, கால் அணைத்து என வரும் வினைச்சொற்களால் அணையாக என்னும் சொல் வருவிக்கப்படும். தோலடிபெடைக்கும் சேவற்கும் பொதுவினின்றது.
|
( 59 ) |
| 1616 |
கண்பயி லிளங்கமு கெருத்திற் காய்பா¦இக் | |
| |
கொண்டிள மந்திக ளெறியக் கோட்டிடைத் | |
| |
திண்கனி முசுக்கலை சிதறுந் தேம்பொழின் | |
| |
மண்டமர் கடந்தவன் மகிழ்வொ டேகினான். | |
|
|
(இ - ள்.) கண் பயில் இளங் கமுகு எருத்தின் காய்பெரீஇக் கொண்டு - தம்முடைய கண் பார்த்துப் பழகிய இளங்கமுகினிடமுள்ள காயை எடுத்துக்கொண்டு; இளமந்திகள் எறிய - இளமையான மந்திகள் எறிதலால் (அதற்குத் தோற்று); கோட்டிடைத்திண்கனி முசுக்கலை சிதறும் தேன் பொழில் - மரக்கிளைகளிலுள்ள திண்ணிய கனியை முசுவின் கலைகள் சிந்தும் இனிய பொழிலிலே; மண்டு அமர் கடந்தவன் மகிழ்வொடு ஏகினான் - பெரும் போரைவென்ற சீவகன் களிப்புடன் சென்றான்.
|
|
(வி - ம்.) இஃது அந் நாட்டின் நகரைச் சூழ்ந்த பொழில்.
|
|
கண் - கணுவுமாம். பெரீஇக்கொண்டு - எடுத்துக்கொண்டு. பரிந்து என்பது ”பெரீஇ” என அளபெடையாய் நின்றது. கடந்தவன் : சீவகன்.
|
( 60 ) |
| 1617 |
களிறுமாய் கதிர்ச்செநெற் கழனி நாட்டிடை | |
| |
யொளிறுவே னரபதி நகர மொய்யெனப் | |
| |
பிளிறுவா ரிடிமுர சார்ப்பப் பெய்கழல் | |
| |
வெளிறிலாக் கேள்வியான் விருப்பொ டெய்தினான். | |
|
|
(இ - ள்.) களிறுமாய் கதிர்ச் செநெல் கழனி நாட்டிடை - யானையை மறைக்கும் கதிர்களையுடைய செந்நெல் நிறைந்த கழனி சூழ்ந்த நாட்டிலே; ஒளிறு வேல் நரபதி நகரம் - விளங்கும் வேலேந்திய மன்னன் வாழும் தலைநகரை; ஒய் எனப் பிளிறு வார் இடிமுரசு ஆர்ப்ப - விரைவாக ஒலிக்கும் பெரிய இடிபோல முரசம் ஆர்ப்ப; பெய்கழல் வெளிறு இலாக் கேள்வியான் - கட்டிய கழலையுடைய தெளிவான கேள்வியையுடைய சீவகன்; விருப்பொடு எய்தினான் - மகிழ்வோடு சென்றான்.
|
|
(வி - ம்.) மாய்த்தல் - மறைத்தல். களிறும் எனற்பாலதாகிய சிறப்பும்மை தொக்கது. ஒளிறுதல் - விளங்குதல்.
|
( 61 ) |
| 1618 |
புறநகர் மணமக னொருவன் போதர்வா | |
| |
னிறைமகன் வினாயினா னென்ன பேரவே | |
| |
துறைவளர் நாட்டொடு நகரஞ் சொல்லென | |
| |
வறிகவென் றலரிவாய் கமழக் கூறினான். | |
|