| கனகமாலையார் இலம்பகம் |
919 |
|
|
|
(இ - ள்.) புறநகர் மணமகன் ஒருவன் போதர்வான் - புறநகரிடத்தே மணமகனாக ஒருவன் வந்தவனை; துறைவளர் நாட்டொடு நகரம் என்ன பேரவே சொல்என இறைமகன் வினாயினான் - பல துறைகளிலும் மேம்பட்டுள்ள இந்நாடும் நகரமும் என்ன பெயருடையன சொல்வாயாக என்று சீவகன் வினாவினான்; அறிக என்று அலரி வாய் கமழக் கூறினான்- அறிந்து கொள்க என்று மணங்கமழும் வாய்மணக்க அவன் உரைத்தான்.
|
|
(வி - ம்.) புறநகர் - நகர்ப்புறம் என்பதன் முன்பின்னாக மாறித்தொக்க தொகை. மணக்கோலத்தோடு வந்த ஒருவனை என்பது கருத்து. போதருவான் - போதர்வான் என உகரந்தொக்கு நின்றது. இறைமகன் என்றது சீவகனை. அலரிவாய் கமழக் கூறினான் என்பது முகத்தான் அமர்ந்து இனிது நோக்கிக் கூறினான் என அவன் அன்புடைமையை உணர்த்தி நின்றது.
|
( 62 ) |
| 1619 |
மத்திம தேசமா நாடு மற்றிநாட் | |
| |
டெத்திசை நிதியமு மிறைகொண் டில்லவர்க் | |
| |
குய்த்துமூர் கொடுப்பவ ரேம மாபுர | |
| |
மித்திசைக் கையநீ புதியை போன்மென. | |
|
|
(இ - ள்.) நாடு மத்திம தேசம் ஆம் - இந்நாடு மத்திம நாடு ஆகும்; இந்நாட்டு எத்திசை நிதியமும் இறைகொண்டு - இந்நாட்டிலே எத் திக்கினும் உள்ள செல்வமும் தங்குதலால்; இல்லவர்க்கு உய்த்தும் கொடுப்பவர் ஊர் ஏமமாபுரம் - வறியவர்க்குக் கொண்டு சென்றும் கொடுப்பவர் இருக்கும் ஊர் ஏமமாபுரம் ஆகும்; ஐய! நீ இத்திசைக்குப் புதியை போன்ம் என - ஐயனே! நீ இப் பக்கத்திற்குப் புதியை போலும் என்றுரைக்க.
|
|
(வி - ம்.) இப்பாட்டுக் குளகம். போன்ம் : போலும் என்பதன் திரிபு. ஈற்றுமிசை உகரம் கெட்டது (தொல் - வினை. 41.)
|
|
நாடு என்புழிச் சுட்டுச்சொல் தொக்கது. நாடு மத்திமதேசமாம் என மாறுக. இறைகொள்ளல் - தங்கிக்கிடத்தல். இறைகொண்டு என்பதனை இறைகொள எனச் செயவெனெச்சமாகக் கொள்க. இல்லவர் - வறியார். உய்த்தும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. ஊர் ஏமமாபுரம் என ஒட்டுக.
|
( 63 ) |
| 1620 |
அன்னதே யென்றலி னடிசிற் காலமா | |
| |
லென்னொடு பேசினாய் தவிர்மற் றீங்கெனப் | |
| |
பொன்னகர்ப் புக்கபி னறிவல் போகென்றான் | |
| |
வின்மா¦இ வாங்கிய வீங்கு தோளினான். | |
|
|
(இ - ள்.) அன்னதே என்றலின் - (அதற்கு) சீவகன் அங்ஙனம் புதியனேன் என்றுரைக்க; அடிசில் காலம், என்னொடும் பேசினாய் - (அவன்) இஃது உணவுக்குரிய காலம், என்னுடனே
|