நாமகள் இலம்பகம் |
92 |
|
உருக்குதல் : நுகர்தற்கு அவளும் ஆண்பாலாக விரும்புதல்.
|
|
'தொழுதாற்கு' என்றதற்கு நச்சினார்க்கினியர் ”தான் தொழப்பட்ட கணவனுக்கு” என வேண்டாது உரைவிரித்தார். ஊடிய காலத்தே தன்னைத் தொழுகின்ற கணவன் வேண்டுகின்ற கூடலைத் தூமுறுவலே உடன்பாடுணர்த்துமாற்றான் அளித்தலின் தொழுதற் வரங்கொடுக்குந் தூமுறுவல் என்றார். தொழுவோன் வேண்டுவதெல்லாம் வரமே ஆகலின் வரம் என்றார்.
|
( 136 ) |
166 |
வண்சிலையை வனப்பழித்து வார்ந்தொழுகி நிலம்பெறா |
|
நுண்கருமை கொண்டொசிந்து நுதலிவர்ந்து போந்துலாய்க் |
|
கண்கூடா கடைபுடைத்துக் கைவல்லா னெழுதியபோற் |
|
பண்பார்ந்த கொடும்புருவம் பழிச்சானாப் படியவே. |
|
(இ - ள்.) கடை புடைத்துக் கைவல்லான் எழுதியபோற் பண்பு ஆர்ந்த கொடும் புருவம் - (எழுத்து ஒருமைப்படத் துகிலிகைக் கோலை) உதறிக் கைதேர்ந்த ஓவியன் எழுதியவற்றைப் போலத் தமக்குரிய பண்பு நிறைந்த கொடிய புருவங்கள் ; வண்சிலையை வனப்பு அழித்து - வளமிகும் வில்லின் அழகைக் கெடுத்து; வார்ந்து ஒழுகி நிலம்றொ - தமக்கு இயன்ற அளவு நீண்டு மேற்செல்லாவாகி ; நுண்கருமை கொண்டு ஒசிந்து - கூரிய கருமைகொண்டு வளைந்து; நுதல் இவர்ந்து போந்து உலாய்க் கண் கூடா - நெற்றியில் தாம் செல்லுதற்குரிய அளவுஞ் சென்று போந்து பரந்து தம்மிற்கூடா (ஆதலின்) ; பழிச்சு ஆனாப் படிய - புகழ்தல் அமையாத தன்மையவாயின.
|
|
(வி - ம்.) 'வனப்பிகந்து வார்ந்தொழுக' என்பதூஉம் பாடம்.
|
( 137 ) |
167 |
சேலனைய சில்லரி கடைசிவந்து கருமணியம் |
|
பாலகத்துப் பதித்தன்ன படியவாய் முனிவரையு |
|
மாலுறுப்ப மகிழ்செய்வ மாண்பினஞ்சு மமிர்தமுமே |
|
போல்குணத்த பொருகயற்கண் செவியுறப்போந் தகன்றனவே. |
|
(இ - ள்.) சில்அரிய - சில இரேகைகளையுடையவாய் ; கடை சிவந்து - கடைப்புறம் சிவந்து; கருமணி அம் பாலகத்துப் பதித்த அன்ன படியவாய் - மாயோனையும் அழகிய பாற்கடலையும் முகத்தே அமைத்தாற் போன்ற தன்மையவாய்; முனிவரையும் மால் உறுப்ப-முனிவர்களையும் மயக்கூட்டுவனவாய் ; மகிழ்செய்வ - களிப்பூட்டுவனவாய்; மாண்புஇல் நஞ்சும் அமிர்தமுமே போல் குணத்த - துன்பத்தால் நலம் இல்லாத நஞ்சும், இன்பத்தால் நலம் தரும் அமிர்தமும் போன்ற பண்பினவாய்; சேல் அனைய,
|
|