| கனகமாலையார் இலம்பகம் |
921 |
|
|
|
பளிக்கறையின் அருகிலே ஒரு மாமர நிழலை; கொண்டு அவற்கு ஓர் குளிர்கொள் பொய்கை அளித்தது - இடமாகக்கொண்டு இருக்கை சீவகனுக்கு ஒரு தண்மைகொண்ட பொய்கை கொடுத்தது.
|
|
(வி - ம்.) உவப்பளித்தவர் - மகிழ்ச்சியளிக்கப்பட்ட மகளிர். ஏக்கறுதல் - ஆசையாற்றாழ்தல். மண்டபமாகிய பளிக்கறை எனினுமாம். மா - மாமரம் சீவகன் தெருவினூடே சென்று ஒரு பொய்கைக்கரையின் கண் மரநிழலிலிருந்தான் என்பது கருத்து.
|
( 66 ) |
வேறு
|
| 1623 |
வண்சிறைப் பவளச் செவ்வாய்ப் | |
| |
பெடையன்ன மடமை கூரத் | |
| |
தண்கய நீருட் கண்ட | |
| |
தன்னிழல் பிறிதென் றெண்ணிக் | |
| |
கண்டனங் கள்வ மற்றுன் | |
| |
காதலி தன்னை நீர்க்கீழ்ப் | |
| |
பண்டைய மல்லம் வேண்டா | |
| |
படுக்வென் றூடிற் றன்றே. | |
|
|
(இ - ள்.) வண் சிறைப்பவளச் செவ்வாய்ப் பெடை அன்னம் - வளவிய சிறையினையும் பவளம்போலச் சிவந்த வாயினையும் உடைய பெட்டை அன்னம்; மடமைகூர - அறியாமை மிகுதலாலே; தண்கய நீருள் கண்ட தன் நிழல் பிறிது என்று எண்ணி - குளிர்ந்த குளத்தின் நீரிலே காணப்பட்ட தன்நிழலை வேறொரு பெடையன்னம் என்று கருதி; கள்வ! உன் காதலி தன்னை நீர்க் கீழ்க் கண்டனம் - கள்வனே! நின் காதலியை நீரின் கீழே பார்த்தோம்; பண்டையம் அல்லம் - இனி, முன் போல் தேற்றத் தேறோம் : படுக்கவேண்டா என்று ஊடிற்று - அகப்படுத்தல் வேண்டா என்று ஊடியது.
|
|
(வி - ம்.) மடமை - அறியாமை. கூர்தல் - மிகுதல். பிறிது - மற்றொரு பெடை. படுத்தல் - அகப்படுத்தல். இச் செய்யுளோடு,
|
| ”மண்ணு மணியன்ன ஒண்ணிறத் தெண்ணீர்த் |
|
| தண்ணிழற் கண்டே என்னிழல் என்னும் |
|
| நுண்மதி நுணுகாப் பெண்மதி பெருக |
|
| .. .. .. .. .. .. .. .. .. |
|
| வேகவூடல் அவள் வயின்” (1 : 40 - 318 - 40) |
|
|
எனவரும் பெருங்கதையினை ஒப்புக் காண்க.
|
( 67 ) |