| கனகமாலையார் இலம்பகம் |
922 |
|
|
| 1624 |
செயிர்ப்பொடு சிவந்து நோக்கிச் சேவலி னகலச் சேவ | |
| |
லயிர்ப்பதெ னின்னை யல்லா லறியலே னன்றி மூக்கி | |
| |
னுயிர்ப்பதுன் பணியி னாலே யூடனீ யென்று பல்காற் | |
| |
பயிர்ப்பறச் சிறகாற் புல்லிப் பணிந்துபாண் செய்த தன்றே. | |
|
|
(இ - ள்.) செயிர்ப்பொடு சிவந்து நோக்கிச் சேவலின் அகல - (இவ்வாறு ஊடிய பேடை) குற்றத்துடன் சினந்து பார்த்துச் சேவலைவிட்டு நீங்க; சேவல் - (அதனை அறிந்த) சேவல்; அயிர்ப்பது என்? - என்னை ஐயுறுவது ஏன்?; நின்னை அல்லால் அறியலேன் - யான் நின்னை அன்றிவேறொன்றறியேன்; அன்றி மூக்கின் உயிர்ப்பது உன் பணியினாலே - அதுவும் அன்றி நான் மூக்கினாலே மூச்சுவிடுவதும் உன் ஏவலாலே யாம்; நீ ஊடல் என்று - (ஆதலின்) நீ ஊடாதே என்றுரைத்து; பயிர்ப்பு அறச் சிறகாற் பல்கால் புல்லி - அருவருப்பு நீங்கச் சிறகினாற் பலமுறை தழுவி; பணிந்து பாண் செய்தது - வணங்கித் தாழ்ச்சி செய்தது.
|
|
(வி - ம்.) செயிர்ப்பு - குற்றம். சிவந்து - வெகுண்டு. அயிர்த்தல் ்- ஐயுறுதல். மூக்கின் உயிர்ப்பது - மூக்காலே மூச்சு விடுதலும். சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ஊடல் - ஊடாதேகொள்.
|
( 68 ) |
| 1625 |
கலையுணர் மகளிர் நெஞ்சிற் | |
| |
காமத்திற் கனிந்த வூட | |
| |
னிலையுணர் மைந்தர் நீக்கி | |
| |
நெறியினாற் புணர்ந்த தொப்ப | |
| |
வலர்மிசைப் பெடையி னூட | |
| |
லன்புகொள் சேவ னீக்கிக் | |
| |
குலவிய புணர்ச்சி நோக்கிக் | |
| |
குன்றனான் சிந்திக் கின்றான். | |
|
|
(இ - ள்.) கலை உணர் மகளிர் நெஞ்சில் காமத்தின் கனிந்த ஊடல் - கலையுணர்ந்த பெண்களின் உள்ளத்திலே ஆசையினாலே கனிவுற்ற ஊடலை; நிலைஉணர் மைந்தர் நீக்கி - நீக்கும் முறை அறிந்த மைந்தர்கள் நீக்கி; நெறியினால் புணர்ந்தது ஒப்ப - நெறியறிந்து கூடியதுபோல; அலர்மிசைப் பெடையின் ஊடல் அன்பு கொள் சேவல் நீக்கி - மலரின்மேல் அமர்ந்த பெடையின் பிணக்கை அன்புடைய சேவல் தணித்து; குலவிய புணர்ச்சி நோக்கி - தங்கிய புணர்ச்சியைப் பார்த்து; குன்றனான் சிந்திக்கின்றான் - முன்னர் மலையெனச் சலியாமல் இருந்தவன் நினைக்கின்றான்.
|
|
(வி - ம்.) கலை : மகளிர்க்குரியவாக மணிமேகலையில் (2 : 18 - 32). கூறிய கலைகள்; கலவிக்குரிய கரணமும் ஆம்.
|