பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 923 

   அன்னங்களின் செயல்கள் சீவகனுக்கு இந் நினைவுகளை உண்டாக்கின என்பது கருத்து.

( 69 )
1626 தன்னையான் முகத்தை நோக்கிற்
  றான்முலை முகத்தை நோக்கும்
பின்னையான் பலவும் பேசிற்
  றானொன்று மிழற்றும் பைம்பூட்
பொன்னவாஞ் சுணங்கு போர்த்த
  பொங்கிள முலையி னாளென்
முன்னையாள் போன்று தத்தை
  முகத்துளே தோன்று கின்றாள்.

   (இ - ள்.) தன்னை யான் முகத்தை நோக்கின் - யான் அவளூடலை நீக்க அவள் முகத்தை நோக்கினால்; தான் முலை முகத்தை நோக்கும் - (எதிர்நோக்கின் ஊடல் நீங்கும் என்று அஞ்சி) அவள் இறைஞ்சி நிற்பாள்; பின்னை யான் பலவும் பேசின் - பின்னர், யான் ஊடல் தீரப் பலவும் பகர்ந்தால்; தான் ஒன்று மிழற்றும் - அவற்றைக் கேளாள்போல அவள் வேறொரு மொழியை மெல்ல மிழற்றுவாள்; பைம்பூண் பொன் அவாம் சுணங்கு போர்த்த பொங்கு இளமுலையினாள் தத்தை - புத்தணிகள் அணிந்த, பொன்போன்ற தேமல் படர்ந்த இன்பம் பொங்கும் இளமுலையாளாகிய தத்தை; என் முன்னையாள் போன்று முகத்துளே தோன்றுகின்றாள் - என் முன்னிருப்பவள் போல என் முகத்திலே காட்சியளிக்கிறாள்.

   (வி - ம்.) அவாம் - விரும்பும் : ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டது (தொல் - வினை - 41) 'முன்னையாள் போன்று' என்பதற்கு 'முன்னர் ஊடினாள் போலவே' என்றும் ஆம். குணமாலையால் தத்தைக்கு ஊடல் தீர்த்ததை நினைத்தான் என்பர் நச்சினார்க்கினியர். ஊடலும் கூடலும் எப்போதும் நிகழ்பவாதலின் அதனையே கூறினாரெனல் பொருந்தாது.

( 70 )
1624 பரிவுற் றாற்பய னின்றியும் பாவைமார்
முரிவுற் றார்களின் மூர்ச்சனை செய்பவாற்
பிரிவிற் றோன்றிய பேரன் பெனப்படு
மெரியின் மூழ்கி யிறந்து படுங்கொலோ.

   (இ - ள்.) பாவைமார் பரிவு உற்றால் பயனின்றியும் - பெண்கள் அன்புற்றால் ஒரு பயன் இன்றியும்; முரிவு உற்றார்களின் மூர்ச்சனை செய்ப - வருத்தம் உற்றார்போல நெட்டுயிர்ப்புக் கொள்வார்கள்; பிரிவில் தோன்றிய பேரன்பு எனப்படும் எரியின் - அப் பிரிவினாலே தோன்றிய மிகுந்த அன்பு என்னும்