| கனகமாலையார் இலம்பகம் |
928 |
|
|
| 1636 |
விண்டார்த் தேய்க்கும் வெம்பரி | |
| |
மான்றோ் விசயன்னென் | |
| |
றுண்டா நின்றான் றன்புக | |
| |
ழூழி யுலகேத்த | |
| |
வண்டார் சோலை வார்மண | |
| |
நாறப் புகுகின்றான் | |
| |
கண்டான் சோ்ந்தான் காளையைக் | |
| |
கல்விக் கடலானே. | |
|
|
(இ - ள்.) விண்டார் தேய்க்கும் வெம் பரிமான் தேர் விசயன் என்று - பகைவரை அழிக்கும் கொடிய குதிரை பூண்ட தேரையுடைய விசயன் என்று; தன் புகழ் ஊழி உலகு ஏத்த உண்டா நின்றான் - தன் புகழை ஊழிக்காலம் வரை உலகு புகழ நிலைபெற்றவன்; வண்டு ஆர் சோலைவார் மணம் நாறப் புகுகின்றான் - வண்டுகள் நிறைந்த பொழிலிலே மிகுமணம் கமழ்தலால் நுழைகின்றபோது; கல்விக் கடலான் காளையைக் கண்டான் சேர்ந்தான் - கல்விக் கடலானாகச் சீவகனைக் குறிப்பாற் கண்டு அருகிற் சென்றான்.
|
|
(வி - ம்.) புகுகின்றான், கண்டான் : முற்றெச்சங்கள்.
|
|
விண்டார் - பகைவர். உண்டாக என்பது உண்டா என ஈறு தொக்கு நின்றது. ஊழி உலகு ஏத்த உண்டாநின்றான் என மாறுக. காளை - சீவகன். கல்விக்கடலான் காளை என மாறுக.
|
( 80 ) |
| 1637 |
இந்நாட் டிவ்வூ ரிவ்விட | |
| |
மெய்தா ரிவண்வாழ்வா | |
| |
ரெந்நாட் டெவ்வூ ரெப்பெய | |
| |
ராய்நீ யுரையென்றாற் | |
| |
கந்நாட் டவ்வூ ரப்பெய | |
| |
ரல்லாப் பெயர்சொன்னான் | |
| |
பொய்ந்நாட் டேனும் பொய்யல | |
| |
வாற்றாற் புகழ்வெய் யோன். | |
|
|
(இ - ள்.) இந்நாட்டு இவ்வூர் இவண் வாழ்வார் இவ்விடம் எய்தார் - இந்நாட்டிலே இவ்வூரிலே இப்பக்கத்தில்லே வாழ்கின்றவர் இங்கு வரமாட்டார்கள்; நீ எந்நாட்டு எவ்வூர் எப்பெயராய் உரை என்றாற்கு - நீ எந்த நாட்டிலே எவ்வூரிலே எப்பெயருடன் இருக்கின்றனை எனக் கூறு என்ற விசயனைப் பார்த்து; அந்நாட்டு அவ்வூர் அப்பெயர் அல்லாப் பெயர் - தன் நாடும் தன் ஊரும் தன் பெயரும் அல்லாத பெயர்களை; பொய்ந் நாட்டேனும்
|