நாமகள் இலம்பகம் |
93 |
|
பொரு கயற்கண் - சேல்மீனைப் போன்று செவியுடன் பொருங்கண்கள்; செவிஉறப் போந்து அகன்றன - செவியுற நீண்டு, அதற்கேற்ப அகன்றிருந்தன.
|
|
(வி - ம்.) (சேல் உவமையாகவும் கயல் அடைமொழியளவேயாகவும் நின்றன. கருமணி, பால் : உவமையாகு பெயர்கள்.)
|
|
கன்னியாதலின் 'மாலுறுப்ப' என்றார், மகிழ்செய்வ - கணவனுக்கு மகிழ்செய்வ.
|
|
இச் செய்யுளில் 'கருமணி அம்பாலகத்துப் பதித்தன்ன படியவாய்' என்ற தொடர்க்கு ”நீலமணியைப் பாலின் அகத்தே பதித்துவைத்தாற் போன்ற தன்மையவாய் ” என்று உரைகூறல் எளிதாயிருப்பவும் தாம் அங்ஙனம் கூறாமைக்குக் காரணம் கூறுவார் ” கருமணியைப் பாலிற் பதித்தால் பால்நிறங் கெடுமென் றுணர்க” என்று கூறினார். இதனால் அவ்வுரையாசிரியரின் நுண்மாணுழைபுலம் உணரப்படும். 'பத்தினிப் பெண்டிர் பிறர்நெஞ்சு புகார்' என்பது கருதி 'கன்னியாதலின் மாலுறுப்ப' என்றார் என்று கூறும் நயமும் உணர்க.
|
( 138 ) |
168 |
மயிரெறி கத்தரிகை யனையவாய் வள்ளைவா |
|
டுயிர்செகுத்து முன்னொன்றிப் பின்பேரா துருவமைந்த |
|
செயிர்மகர குண்டலமுந் திளைப்பானா வார்காதும் |
|
வயிரவின் முகஞ்சூடி வண்ணம்வீற் றிருந்தனவே. |
|
(இ - ள்.) மயிர்எறி கத்தரிகை அனையவாய் - மயிரை வெட்டும் கத்தரிகை போன்றனவாய்; வாடு வள்ளை உயிர் செகுத்து - வாடிய வள்ளைக் கொடியின் அழகைக் கெடுத்து: பின் பேராது முன் ஒன்றி - பின்னே மறியாமல் முன்னே பொருந்தி; உருஅமைந்த செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார்காதும் - அழகு பொருந்திய மகரமீன் வடிவமான குண்டலமும் தோடும் அசைதல் அமையாத காதும்; வயிரவில் முகம்சூடி வண்ணம்வீற்றிருந்தன - வயிரத்தின் ஒளியைத் தம்மிடத்தே கொண்டு அழகு வீற்றருந்தன.
|
|
(வி - ம்.) 'வாட்டு' ஆயின், 'வாட்டின காது' என்க. காதும் என்ற உம்மை இறந்தது தழீஇயிற்று
|
|
குண்டலமும் என்ற உம்மையால் தோடு கொள்ளப்பட்டது.
|
|
செகுத்து என்னும் வினைக்கேற்ப அழகினை உயிர் என்றார்.
|
( 139 ) |
169 |
ஈனாத விளங்கமுகின் மரகத மணிக்கண்ணு |
|
மானாதே யிருள்பருகு மருமணி கடைந்ததூஉந் |
|
தானாகி யிருளொடோர் தாமரைப்பூச் சுமந்தன்ன |
|
கானார்ந்த திரள்கழுத்துக் கவின்சிறைகொண் டிருந்ததே. |
|