கனகமாலையார் இலம்பகம் |
935 |
|
|
(இ - ள்.) செந்தாமரை அடிகள் கழலின் புல்லி - செந்தாமரை அனைய அடிகளைப் பொருந்திய செருப்புப் போலப் பொருந்தி; தம் காதல் கூர நிழலின் நீங்கார் - தம் அன்பு மிகுதலாலே நிழல்போல நீங்காராய்; நினைத்தன நினைப்பின் அமைவான் ஆக்கி - அவன் நினைத்தவற்றை நினைத்தவாறே பொருந்த முடித்து; அழலின் சாராது அகலாது ஒழுக - தீப்போல அணுகாமலும் அகலாமலும் ஒழுகிவர; அவன் ஒரு நாள் போகிப் பொழிலின் மிக்கதனின் புக்கான் - சீவகன் ஒருநாள் புறம் போந்து பொழிலிற் சிறப்புற்ற தொன்றினுள் புகுந்தான்; மண மகளிர் போல் பொலிந்தது - அதுவும் பல மணத்தால் மண மகளிரைப் போல விளங்கியது.
|
(வி - ம்.) 'இனிக் கழலென்பதனைக் கழலையுடைய தலைவன் காலாக்கி, அக் காலொடு தலைமகளிர் புணர்ந்து உடன்போகும் என்பாரும் உளர்' - இது பதிற்றுப்பத்தின் பழையவுரை.
|
'ஒண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும் - விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும்' (பதிற் - 30) என்றார் பிறரும். 'அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி' என்னும் நன்னூற்பாயிரம் ஒப்பு நோக்கத்தக்கது.
|
( 92 ) |
1649 |
பாசிப் பாசத்துப் பைம்பொ | |
|
னிரைத்தாலி பூத்த வேங்கை | |
|
மாசில்வெண் டுகிலை நீர்தோய்த்து | |
|
மேற்போர்த்த வண்ண மேபோற் | |
|
காசின்மட் டொழுகப் பூத்த | |
|
வழிஞ்சில்கண் ணார்கவின் கொண்டன | |
|
பேசிற் செந்தலைய வெண்கறைய | |
|
புன்கம் பொரிய ணிந்தவே./span> |
|
(இ - ள்.) வேங்கை பாசிப்பாசத்துப் பைம்பொன் நிரைத்தாலி பூத்த - வேங்கைகள் பச்சைக் கயிற்றிலே புதிய பொன்னால் வரிசையாகிய தாலியைக் கோத்தாற் போலப் பூத்தன; மாசு இல் வெண்துகிலை நீர் தோய்த்து மேல் போர்த்த வண்ணமே போல் - குற்றமற்ற வெள்ளாடையை நீரிலே நனைத்து மேலே போர்த்த தன்மையைப் போல்; காசு இல் மட்டு ஒழுக அழிஞ்சில் பூத்த - குற்றமற்ற தேன் சொரிய அழிஞ்சில்கள் மலர்ந்தன; பேசின் செந்தலைய வெண்கறைய பொரிபுன்கம் அணிந்த - கூறினால் செந்தலையையும் வெண் மறுவையும் உடைய நெற்பொரி போலப் புன்குகள் பூத்தன; கண் ஆர் கவின் கொண்டன - இவை கண்கள் நிறைந்த அழகைக் கொண்டன.
|
(வி - ம்.) வேங்கை தாலிபோலப் பூத்தன. அழிஞ்சில் நீர்தோய்த்த வெண்டுகிலை மேலே போர்த்தாற் போன்று பூத்தன. புன்கு பொரிபோற் பூத்தன என்க.
|
( 93 ) |