கனகமாலையார் இலம்பகம் |
936 |
|
|
1650 |
கோடு தையாக் குழிசியோ டாரங் கொளக்கு யிற்றிய | |
|
வோடு தோ்க்கான் மலர்ந்தன வகுள முயர்சண் பகங் | |
|
கூடு கோழிக் கொழுமுள் ளரும்பின வங்கோ சிக | |
|
வாடை பூத்தன பாதிரி வெண்க டம்புபந் தணிந்தவே. | |
|
(இ - ள்.) குழிசியோடு ஆரம் கொளக் குயிற்றிய கோடு தையா ஓடு தேர்க்கால் வகுளம் மலர்ந்தன - குடத்துடன் ஆர்கள் அழுந்தத் தைத்து, மேற் சூட்டு வையாத, தேரின் உருளைபோல மகிழ்கள் மலர்ந்தன; உயர் சண்பகம் கோழி கூடு கொழுமுள் அரும்பின - உயர்ந்த சண்பகங்கள் கோழியிடத்தே கூடிய முள்ளைப் போல அரும்பின; பாதிரி அம் கோசிக ஆடை பூத்தன - பாதிரி மலர்கள் அழகிய கோசிக மென்னும் பட்டாடை போல மலர்ந்தன; வெண் கடம்பு பந்து அணிந்த - வெண்கடம்புகள் பந்து போல மலர்ந்தன.
|
(வி - ம்.) வகுளம் - மகிழமரம். வகுளம் தேருருள்போலப் பூத்தன. சண்பகம் கோழிமுள்போல அரும்பின, பாதிரி கோசிக ஆடைபோலப் பூத்தன, வெண்கடம்பு பந்துபோலப் பூத்தன என்க. கோசிக ஆடை - பட்டாடை.
|
( 94 ) |
1651 |
வெருகு வேட்பச் சிரிப்பனபோன் | |
|
முகைத்த முல்லை வெய்யவா | |
|
ளரவு பைத்தா வித்தன்ன | |
|
வங்காந்த ளவிழ்ந்த லர்ந்தன | |
|
குரவங் கொண்ட குறும்பூழ்போற் | |
|
கொழுங்கான் முகைசு மந்தன | |
|
குருதிக் கூரெயிறு கூத்தியர்கட் | |
|
கொண்ட கொடித்த ளவமே. | |
|
(இ - ள்.) வெருகு வேட்பச் சிரிப்பனபோல் முல்லை முகைத்த - காட்டுப்பூனை விருப்புற நகைப்பன போல முல்லை அரும்பின; வெய்ய வாய் அரவு பைத்து ஆவித்த அன்ன அம்காந்தள் அவிழ்ந்து அலர்ந்தன - கொடிய வாயையுடைய நாகப்பாம்பு படம் விரித்துக் கொட்டாவி கொண்டன போல செங்காந்தள் அரும்பு விரிந்து பிறகு மலர்ந்தன; கொண்ட குறும்பூழ் கொழுங்கால் போல் குரவம் முகை சுமந்தன - கையிலே பிடித்த குறும்பூழ்ப் பறவையின் கொழுவிய கால்போல குரவம் கொழுவிய அரும்புகளைச் சுமந்தன; கூத்தியர்கண் குருதிக் கூரெயிறு கொடித் தளவம் கொண்ட - கூத்தாடும் பெண்களிடத்துச் சிவந்த கூரிய பற்களைப்போல கொடிகளாகிய செம்முல்லைகள் அரும்பின.
|