கனகமாலையார் இலம்பகம் |
937 |
|
|
(வி - ம்.) வெருகு - காட்டுப்பூனை. முல்லை வெருகு சிரிப்பனபோல் முகைத்தன. காந்தள் அரவு பைத்து. ஆவித்தனபோல் அலர்ந்தன. குரவம் பூழ்க்கால் போல் அரும்பின. தளவம் கூத்தியர் எயிறுபோல் அரும்பின என்க. அரும்புகள் மேனோக்கி நிற்றற்குவமையாகக் கையிலே பிடித்த குறும்பூழின்கால் என்பார் கொண்ட குறும்பூம்க்கால் என்றார். 1649 முதல் இச் செய்யுள் முடியக் கூறிய உவமை நலம் உணர்ந்து மகிழற்பாற்று.
|
( 95 ) |
1652 |
சொன்ன நன்மலரு மல்லனவும் | |
|
வீழ்பல வின்சூழ் சுளைகளு | |
|
நன்மை நூலி னயந்தோன்ற | |
|
நன்பொன் விரலி னுதியினாற் | |
|
பன்மணியு முத்தும் பவளமும் | |
|
பைம்பொன்னுங் கோத்தா லொப்ப | |
|
வென்ன வமரரு மருளத் | |
|
தொடுத்தா னினமா லையே. | |
|
(இ - ள்.) சொன்ன நல் மலரும் அல்லனவும் வீழ்பலவின் சூழ்சுளைகளும் - இங்குக் கூறப்பட்ட அழகிய மலர்களையும் பிற மலர்களையும் விரும்பும் பலவின் சுளைகளையும் கொண்டு; நன்மை நூலின் நயம் தோன்ற - உயர்ந்த நூல்களிற் கூறிய அழகு பொருந்த; பல்மணியும் முத்தும் பவளமும் பைம் பொன்னும் கோத்தால் ஒப்ப - பல மணிகளையும் முத்துக்களையும் பவளங்களையும் பொன்னையும் தொடுத்தாற் போல; என்ன அமரரும் மருள - எத்தகைய வானவரும் மயங்க;நன்பொன் விரல் நுதியினால் - தன் அழகிய பொன் அணிந்த விரல் நுனியினால்; இனமாலை தொடுத்தான் - ஒரு வகை மாலையைக் கட்டினான்.
|
(வி - ம்.) வகைமாலை : மாலைகளில் ஒன்று.
|
அல்லன - ஈண்டுக் கூறப்படாத மலர்கள். வீழ்பலவின் சுளை - விரும்புதற்குரிய சுளை. சூழ்சுளை - சூழ்ந்திருக்கும் சுளை, இனித்தின்போர் விரும்பிச் சூழ்தற்குக் காரணமான சுளை எனினுமாம். என்ன அமரரும் - எத்தகைய தேவரும்.
|
( 96 ) |
1653 |
ஊனுண் சிங்கக் குழவி | |
|
யெயிற்றே ரொளியெ யிற்றினான் | |
|
றேனுண் போதிற் பிணையலும் | |
|
பந்தும் புனைந்து தேமார்ந்த | |
|
நானந் தோய்த்து நனைகலவை | |
|
நாறு மதந்தெ ளித்தபின் | |
|
பானுண் டீஞ்சொல் லாளோர் | |
|
படுவிவண் டார்ப்பவந் திறைஞ்சினாள். | |
|