பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 94 

   (இ - ள்.) ஈனாத இளங்கமுகின் மரகத மணிக்கண்ணும் - குலையிடாத இளங்கமுகின் மரகத மணிபோலும் கணுவும்; ஆனாதே இருள் பருகும் அருமணி கடைந்ததும் - இருளை முற்றும் கெடுக்கும் அரிய மாணிக்கத்தைக் கடைந்ததுவும் ; தான் ஆகி - அதுவாகி; இருளாடு ஓர் தாமரைப்பூச் சுமந்த அன்ன - இருளையும் ஒரு தாமரை மலரையும் சுமந்தாற் போன்ற; கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின்சிறை கொண்டிருந்தது - மணம் நிறைந்த திரண்ட கழுத்து அழகு குடிகொண்டிருந்தது.

 

   (வி - ம்.) கோட்புகாத[குலையினாத] கன்னிக் கமுகுவரையிற்கும், நெய்ப்பிற்கும், மணி திரட்சிக்கும், நிறத்திற்கும் உவமம். உதயகிரியிற் சிந்துர அருவி வீழ்ந்த சிந்தூராகரத்திற் பதினாறு சதுர்யுகம் சிவப்பேறின முழு மாணிக்கம் இருளைக் கெடுத்தலின், 'இருள்பருகு மணி' என்றார். இருளும் தாமரையும் மயிர்க்கும் முகத்திற்கும் உவமம். கான் - மணம்.

( 140 )
170 மணிமகரம் வாய்போழ்ந்து வாழ்முத்த வடஞ்சூழ்ந்தாங்
கணியரக்கார் செம்பஞ்சி யணையனைய வாடமைத்தோ
டுணிகதிர் வளைமுன்கைத் தொகுவிரல் செங்காந்தண்
மணியரும்பு மலரங்கை குலிகமார் வனப்பினவே.

   (இ - ள்.) ஆடுஅமைத் தோள் - அசையும் மூங்கிலனைய தோள்கள் ; மணிமகரம் வாய்பேழ்ந்து ஆங்கு வாழ்முத்த வடம் சூழ்ந்து - அழகிய சுறாமீன் வாய்திறத்தலாலே ஆங்கு வாழும் முத்துமாலை சூழப்பட்டு; அணி அரக்கு ஆர் செம்பஞ்சி அணை அனைய - அழகிய செந்நிறம் பொருந்திய செம்பஞ்சணையைப் போன்றன; துணிகதிர் வளை முன்கைத் தொகுவிரல் - தெளிந்த கதிர் சொரியும் வளையணிந்த முன்கையிற் குவிந்த விரல்கள்; செங்காந்தள் மணிஅரும்பு - செங்காந்தளின் அழகையுடைய அரும்பை அனைய; அங்கை மலர் குலிகம் ஆர்வனப்பின - அகங்கைகள் தாமரை மலரனைய; அக் கைகள் குலிகம் பொருந்திய அழகின.

 

   (வி - ம்.) பஞ்சணை மென்மைக்கும் நிறத்திற்கும் உவமம். அமைதிரட்சிக்கும் நெய்ப்பிற்கும் உவமம். துணிதல் - தெளிதல்

 

   'போழ்ந்த'வும், வான் முத்தமும் பாடம்.

( 141 )
171 தாமச்செப் பிணைமுகட்டுத் தண்கதிர் விடுநீல
மாமணிதா பித்தனபோன் மனம்பருகு கருங்கண்ண
வேமுற வடிபரந் திளம்பிறை வடஞ்சூடி
யாமணங்கு குடியிருந் தருஞ்சுணங்கு பரந்தனவே.

   (இ - ள்.) தாமச்செப்பு இணை - மாலையணிந்த செப்புகளைனைய இரு முலைகளும் ; முகட்டுத் தண்கதிர்விடு நீலமாமணி