பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 940 

   (இ - ள்.) ஆம்பல் நாறும் அரக்கு ஆர் பவழவாயார் அமுது அன்னார் - அல்லி மலர்போற் காணப்பெறுஞ் சிவப்பு நிறைந்த பவழவாயாரும் அமுது போன்றாரும்; பாம்பு பைத்தாங்கு அனைய பவழப் பட அரவு அல்குலார் - பாம்பு படம்விரித்தாற் போன்ற பவழ மேகலை புனைந்த, அல்குலாரும் ஆகிய; தாம்பலரும் மருட்ட - மகளிர் பலரும் மருட்ட; அகில் தவழும் தண் பூவணை - அகிற் புகை தவழும் தண்ணிய மலரணையிலே; காம்பு இன் மென் தோள் கவின் வளர வைகல் கலப்பு என்ப - மூங்கில் அனைய இனிய மெல்லிய தோள் மிசை அழகு வளரத் தங்குதல் கலப்பு என்பார்கள்.

   (வி - ம்.) என்ப : பலர்பால் வினைமுற்று.

   பவழவாயார் என்புழி அடைமொழி உவமை குறியாமனின்றது. படவரவல்குலார் என்புழியும் அங்ஙனமே அடைமொழி உவமங் குறியாமல் பெயர் மாத்திரையாய் நின்றது. பாம்பு பைத்தாங்கு மருட்ட என நச்சினார்க்கினியர் கூட்டிக்கூறும் பொருள் சிறப்புடையதாகத் தோன்றவில்லை.

( 100 )
1657 ஆகந் தானோர் மணிப்பலகை யாக முலைக ணாயாகப்
போகக் கேற்ற புனைபவழ வல்குல் கழக மாக
வேக வின்பக் காமக் கவறாட லியைவ தன்றே
லாக நோற்றிட் டடங்க லாண்மைக் கழகென் பவே.

   (இ - ள்.) ஆகம் தான் ஓர் மணிப் பலகை ஆக - தன் மார்பு மணிகளிழைத்த ஒரு பலகையாக; முலைகள் நாய் ஆக - மகளிரின் முலைகள் நாயாக; போகக்கு ஏற்ற புனைபவழ அல்குல் கழகம் ஆக - இன்பத்திற்குத் தக்க, பவழ மேகலை அணிந்த அல்குல் சூதாடும் இடம் ஆக; ஏக இன்பக் காமக் கவறு ஆடல் இயைவது அன்றேல் - ஒப்பற்ற இன்பத்தையுடைய காமச் சூதாடல் கூடாது எனின்; ஆக நோற்றிட்டு அடங்கல் ஆண்மைக்கு அழகு என்ப - இவை யாவும் மேலுண்டாவதற்காகத் தவம்புரிந்து அடங்கியிருத்தல் ஆண்மைக்கு அழகு என்று கூறுவர்.

   (வி - ம்.) குழலாள் நோக்குவாளாயினாள்; அவ்வாறு நோக்கும் போது மாலையிலிருந்த மலரெழுத்துக்களை இவ்வாறு வாசித்தாள்.

   நச்சினார்க்கினியர், 'நோக்கும் குழலாள்' என முதற்செய்யுளில் அமைத்து வாசித்தாள் என மூன்றாஞ்செய்யுளில் முடிப்பர். அவர் 99 -101 ஆகிய மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கி முடிக்கும் முடிபு:-

   ”மாலையை வாங்கிக்கொண்டு தாங்கி, வாசிக்குங் குழலாள், அரக்காம்பல் போல நாறும் பவழவாயார். அமுதன்னார், அல்குலாராகிய மகளிர்தாம் பலரும் ஆடும் நாடகங் கண்டு வாழாதார் வாழும் வாழ்வெல்லாம் - நன்கு நுகராத - வேடர் வாழ்வாயிருக்கும். அவரைக்