பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 941 

   கலக்குமிடத்து வேற்றடங் கண்கள் தாம் பாம்பு பைத்தாங்கு மருட்ட, தேன்துளிக்கும்படி முலைகள்பாய, அவர் தோள் கவின் வளர அணையிலே தங்குதல் கலப்பென்று கூறுவர். அங்ஙனம் கலந்து ஆகம் பலகையாக, அவர் முலைகள், நாயாக, அல்குல் கழகமாக, கவறாடல் கூடாதாயின், இவை மேலுண்டாகத் தவஞ் செய்தடங்குதல் ஆண்மைக்கு அழகு என்று கூறுவர் என்று வாசித்தாள் என்க”

( 101 )
1658 பின்னி விட்ட பிடித்தடக்கை
  யிரண்டு போன்று திரண்டழகார்
கன்னிக் கலிங்க மகிலார்ந்து
  கவவிக் கிடந்த குறங்கினாண்
மின்னுக் குழையும் பொற்றோடு
  மிளிர வெருத்த மிடங்கோட்டி
யென்னு மிமையா ணினைத்திருந்தா
  ளியக்கி யிருந்த வெழிலொத்தாள்.

   (இ - ள்.) பின்னி விட்ட பிடித் தடக்கை இரண்டு போன்று திரண்டு - (தாம் இடை வெளியின்றி இருத்தலின்) சேர்த்து விட்ட பிடியின் பெரிய கைகள் இரண்டு போன்று திரண்டு; அழகு ஆர் கன்னிக் கலிங்கம் அகில் ஆர்ந்து கவவிக் கிடந்த குறங்கினாள் - அழகு பொருந்திய கணவன் தீண்டாத ஆடை அகில் மணம் பொருந்திப் பற்றிக் கிடந்த துடையினாள்; மின்னுக் குழையும் பொன் தோடும் மிளிர எருத்தம் இடம் கோட்டி - ஒளிரும் குழையும் பொன் தோடும் விளங்கக் கழுத்தை இடப்பக்கம் சாய்த்து; என்னும் இமையாள் நினைத்திருந்தாள் - சிறிதும் இமையாளராய் அம் மாலையின் வாசகத்தை எண்ணியிருந்தவள்; இயக்கி இருந்த எழில் ஒத்தாள் - இயக்கி இருந்த அழகை ஒத்தாள்.

   (வி - ம்.) இயக்கியும் தனக்கு மேலான இறைவனை எண்ணி இமையாது இருப்பாள் என்றுணர்க.

   கணவன் தீண்டாத ஆடை என்பார் கன்னிக் கலிங்கம் என்றார். கலிங்கம் - ஆடை. குறங்கு - துடை, என்னும் - சிறிதும். இமையா திருந்தமைக்கு இயக்கி உவமை.

( 102 )
1659 கொடுவெஞ் சிலையைக் கொளையமைத்துக்
  கொதிநீர்ப் பகழி கொளவாங்கிக்
கடுவெங் குறவ னெயப்பட்ட
  கன்னிப் பிணையி னிலைகலங்கித்