பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 942 

1659 தொடிதோ ணடப்பத் தோடேம்பத்
  துணைவெம் முலைகள் பசப்பூர
நெடுமாத் தோகை மென்சாய
  னெஞ்சிற் கிவ்வா றுரைக்கின்றாள்.

   (இ - ள்.) கொடு வெம் சிலையைக் கொளை அமைத்து - வளைந்த கொடிய வில்லை நாணேறிட்டு; கொதி நீர்ப் பகழி கொள வாங்கி - உலையிலே காய்ச்சிய தன்மையுடைய அம்பை நிரம்ப வளைத்து; கடுவெங் குறவன் எயப்பட்ட கன்னிப் பிணையின் நிலைகலங்கி - மிகவும் கொடிய வேடனால் எய்யப்பட்ட கன்னித் தன்மையுடைய பிணைமானின் நிலையைத் தப்பி; தொடி தோள் நடப்பத் தோள் தேம்ப - தொடிகள் தோளிலே உலாவுமாறு தோள்கள் மெலிய; துணை வெம் முலைகள் பசப்பு ஊர - இணையான வெம் முலைகள் பசலைபாய; நெடுமாத் தோகை மென்சாயல் நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றாள்- நெடிய கரிய மயில் போலும் மெல்லிய தன்மையாள் உள்ளத்திற்கு இவ்வாறு இயம்புகிறாள்.

   (வி - ம்.) நிலை கலங்குதல் - ஈண்டு இறந்துபாடு நீங்குதல். மாலையைத் தன் பணிப்பெண் கொண்டு வருதலின், அவற்கு நிகழ்ந்த வேட்கை தன்னிடத்தே என்று கருதி இறந்துபாடு நீங்கினாள். பிணைபோல் என்றால், மேல் வருத்தமின்றி இறந்துபாடு தோன்றும்.

( 103 )
1660 ஒன்றே யெயிற்ற தொருபெரும்பே
  யுலகம் விழுங்க வங்காந்து
நின்றாற் போல நிழலுமிழ்ந்து
  நெடுவெண் டிங்க ளெயிறிலங்க
வின்றே குருதி வானவா
  யங்காந் தென்னை விழுங்குவா
னன்றே வந்த திம்மாலை
  யளியே னாவி யாதாங்கொல்.

   (இ - ள்.) ஒன்று எயிற்றது ஒரு பெரும் பேய் உலகம் விழுங்க அங்காந்து நின்றாற் போல - ஓர் எயிற்றை உடையதான ஒரு பெரிய பேய் உலகை விழுங்குதற்கு வாயைத் திறந்து நின்றாற் போல; நிழல் உமிழ்ந்து நெடுவெண் திங்கள் எயிறு இலங்க - ஒளியைச் சொரிந்து நீண்ட வெண்மதியாகிய பல் விளங்க; குருதி வான வாய் அங்காந்து - செக்கர் வானமாகிய வாயைத் திறந்து ; என்னை விழுங்குவான் அன்றே இம்மாலை இன்றே வந்தது? - என்னை விழுங்குவதற்கன்றோ இம்மாலையானது இப்போதே வந்தது?; அளியேன் ஆவி யாது ஆம் கொல்? -