| கனகமாலையார் இலம்பகம் |
943 |
|
|
|
இரங்கத் தக்கேன் உயிர் என்னாகுமோ? (இம் மாலையின் கண்ணதோ? என் கண்ணதோ?)
|
|
(வி - ம்.) ஒன்றே : ஏ : அசை. வந்தது : விரைவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாக வந்த வழுவமைதி
|
|
ஓரெயிற்றது எனற்பாலது ஒன்றே எயிற்றது எனப் புணர்ச்சி பெறாமனின்றது. ஒற்றைப் பல்லையுடைய பெரும்பேய் பிறையையுடைய மாலைப்பொழுதிற்குவமை. நிழல் - ஒளி. வானவாய் : பண்புத் தொகை; விழுங்குவான் : வினையெச்சம்.
|
( 104 ) |
| 1661 |
வருந்தி யீன்றாண் மறந்தொழிந்தாள் | |
| |
வளர்த்தாள் சொற்கேட் டில்கடிந்தாண் | |
| |
முருந்தின் காறுங் கூழையை | |
| |
முனிவார் நின்னை யென்முனிவார் | |
| |
பொருந்திற் றன்றா லிதுவென்னாய் | |
| |
பொன்று மளித்திவ் வுயிரென்னாய் | |
| |
திருந்து சோலைக் கருங்குயிலே | |
| |
சிலம்ப விருந்து கூவுதியால். | |
|
|
(இ - ள்.) திருந்து சோலைக் கருங் குயிலே! - அழகிய சோலையிலே (மறுவைப்போல் இருக்கும்) கரிய குயிலே!; இது பொருந்திற்று அன்று என்னாய் - மாலை வருகின்ற காலத்து யாம் கூவும் இது இவர்க்குத் தனிமையால் வருத்தமூட்டு மாதலால் பொருத்தமுடையது அன்று என்று நினையாய்; அளித்து இவ்வுயிர் பொன்றும் என்னாய் - இரங்கத்தக்க இவ்வுயிர் இறந்துபடும் என்றும் எண்ணாய்; இருந்து சிலம்பக் கூவுதி - அமர்ந்து முழக்க மிட்டுக் கூவுகின்றாய்; (இத் தன்மையை ஆதலின்); வருந்தி ஈன்றாள் மறந்து ஒழிந்தாள் - உன்னை வருந்திப் பெற்ற நற்றாய் (குயில்) மறந்து விட்டாள்; வளர்த்தாள் சொல் கேட்டு இல் கடிந்தாள் - வளர்த்த செவிலி (காக்கை) நின் சொல்லைக் கேட்டவுடனே வீட்டினின்றுந் துரத்திவிட்டாள்; முருந்தின் காறும் கூழையை - நீயோ என்பளவும் சென்ற மயிரை யுடையாய்; நின்னை முனிவார்? என் முனிவார்? - நின்னை வெறுப்பவர் நின் பிறப்பையோ, வளர்ப்பையோ, வடிவையோ வெறுப்பார்?
|
|
(வி - ம்.) இது சினத்தினால் வந்த திணைமயக்கம்.
|
|
வருந்தியீன்றாள் என்றது தாய்க்குயிலை. வளர்த்தாள் என்றது காக்கையை. குயில் காக்கைக் கூட்டில் அதன் முட்டைகளோடு முட்டையிட்டு வைத்துப் போய்விடக் காக்கை அதனைத் தன் முட்டை யென்றே அடைகாத்துக் கிடக்கும். குஞ்சு வெளிப்பட்ட பின்னர் அதன் குரலான் வேற்றுமை யுணர்ந்து கடிந்து விரட்டிவிடும். இந் நிகழ்ச்சியை ஈண்டுத் தேவர் இங்ஙனம் செய்யுளில் புனைந்தளிக்கின்றார்.
|
( 105 ) |