கனகமாலையார் இலம்பகம் |
944 |
|
|
1662 |
பெருவெண் டிங்கண் மாலகப்பூ | |
|
மலைந்து பெட்ப நகுகின்ற | |
|
துருவு கொண்ட குரலன்றி | |
|
லுயிர்மே லாம்ப லுலாய்நிமிரு | |
|
மொருபெண் பாலென் யானாக | |
|
வுலக மெல்லாம் பாகையாகி | |
|
யெரிகொன் றீன்ற விலைப்பலிபோ | |
|
லிருத்தி யாலென் னின்னுயிரே. | |
|
(இ - ள்.) பெரு வெண் திங்கள் மால் அகப் பூ மலைந்து பெட்ப நகுகின்றது - பெரிய வெள்ளிய திங்கள் மயக்கமுற்ற மனமாகிய மலருடன் மலைந்து அதன் கேடு கண்டு மிகவும் நகைக்கின்றது ; அன்றில் குரல் உருவு கொண்ட - அன்றில்கள் தம் குரலாலே வடிவைக் கொண்டன; ஆம்பல் உலாய் உயிர் மேல் நிமிரும் - ஆம்பல் என்னும் பண் சூழ்ந்து உலாவி இவ்வுயிரின் கேடு கண்டு இதன் மேலே நடக்கின்றது; உலகம் எல்லாம் பகையாகி ஒரு பெண்பாலென் யானாக - (இவ்வாறு) உலகம் முற்றும் பகையாதற்குப் பற்றாதவாறு ஒரு பெண்பாலேன் யான் ஆகவும்; என் இன் உயிரே! எரி கொன்று ஈன்ற இலைப் பலிபோல் இருத்தி - என் கொடிய உயிரே! நீ தீ மேய்ந்து வேறொரு வடிவாகப் பெற்ற இலைச் சாம்பல் போலேயிரா நின்றாய்.
|
(வி - ம்.) 'இஃது நீ இருக்கும் அளவு அன்று; நின் நினைவு என்' என்றாள் என்க.
|
அகப்பூ - மன மலர். உலகம் : இடவாகு பெயர். பகை ஆகி - பகையாக : எச்சத்திரிபு. பின்னும் இலை போலிருத்தலின் 'ஈன்ற' என்றார். இது தொழிலுவமம். ஏ : எதிர்மறை.
|
( 106 ) |
1663 |
வேமென் னெஞ்ச மெய்வெதும்பும் | |
|
விடுக்கு மாவி வெய்துயிர்க்கும் | |
|
பூமென் குழலார் புறநோக்கி | |
|
நகுவார் நகுவ தாயினேன் | |
|
றாம மார்பன் றான் புனைந்த | |
|
தண்ணென் மாலை புணையாக | |
|
யாமக் கடலை நீந்துவேன் | |
|
யாரு மில்லாத் தமியேனே. | |
|
(இ - ள்.) என் நெஞ்சம் வேம் - காமத் தீயால் என் உள்ளம் வேகும்; மெய் வெதும்பும் - (அதனால்) உடம்பு
|