பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 949 

றனை என்று அவனை இகழ்ந்த அவளுக்கு; கோதாய்! அஃது அன்று இன்ன கொள்கையேற்கு ஏலாது என்ன - கோதையே! அஃதன்று ஆசிரியனாந் தன்மையேனுக்கு இது பொருந்தாது காண் என்ன; இலங்கு எயிற்றினாள் அன்னம் அன்ன நடையினாள் தான் வருந்தும் என - (அது கேட்டு) விளங்கும் முறுவலினாளாகிய தோழி, 'நீ இதனை வாங்கா தொழியின் அன்னம் போன்ற நடையினையுடைய என் தலைவி வருந்துவாள் என்று கூற; நேர்ந்தான் - அதற்கு அஞ்சி அவனும் ஒப்பினான்.

   (வி - ம்.) மன்னர் கோயில் உறைவார் பொறிசெறித்த மாண்பினர் என்றது யான் பொறியடங்கியிருப்பதே நேரிது என்றவாறு. அஃது என்றது அவ்வச்சம் என்றவாறு. இன்ன கொள்கையேற்கு என்றது அரசன் மக்கட்கு ஆசிரியனாம் மேற்கோளினை யுடையேனுக்கு என்றவாறு. எயிற்றினாள் - அநங்கவிலாசினி. நடையினாள் - கன கமாலை

( 113 )
1670 குலிக மார்ந்த கொழுந்தா
  மரையன்ன வண்கை நீட்டி
யொலிய லேற்றா னிஃதூழ்
  வினையாலுள் ளஞ்சுடு மாலென்ன
விலைகொள் பைம்பூ ணிளமுலையாள்
  போகிக் கனக மாலை
மெலிய வெம்பி நைகின்றா
  ளுய்யும் வகைதொ டங்கினாள்.

   (இ - ள்.) குலிகம் ஆர்ந்த கொழுந்தாமரை அன்ன வண்கை நீட்டி - சாதிலிங்கம் ஊட்டப்பெற்ற வளவிய தாமரை போன்ற வண்மையுறுங் கையை நீட்டி; ஒலியல் ஏற்றான் - மாலையை வாங்கினான்; இஃது ஊழ்வினையால் உள்ளம் சுடும் என்ன - (வாங்கி) இதுதான் உழுவல் அன்பினாலே என் மனத்தைச் சுடும் என்றானாக; இலை கொள் பைம் பூண் இள முலையாள் போகி - (அது கேட்டபின்) பூணணிந்த இள முலையாளாகிய அநங்க விலாசினி சென்று; மெலிய வெம்பி நைகின்றாள் கனகமாலை உய்யும் வகை தொடங்கினாள் - சோர்வுறவெதும்பி வருந்துகின்ற கனகமாலை பிழைக்கும் நெறியைக் காணத் தொடங்கினாள்.

   (வி - ம்.) குலிகம் - சாதிலிங்கம்; இது அதன் சிவப்பை உணர்த்தியது. ஆர்ந்த - நிறைந்த. குலிகம், சிவப்பு என்றும் பொருள்தரும். ஒலியல் - மாலை. ஊழ்வினை ஈண்டு உழுவலன்பு என்னும் பொருட்டாய் நின்றது : ஆகுபெயர். சுடுமால் என்புழி ஆல், அசை, இளமுலையாள் - அநங்கவிலாசினி. நைகின்றாளாகிய கனகமாலை என்க. நைகின்றாள்; வினையாலணையும் பெயர்.

( 114 )