கனகமாலையார் இலம்பகம் |
950 |
|
|
1671 |
நீர்செய் காந்த மணிகூந்த | |
|
ளம்பா வைநீண் டழகிய | |
|
வோ்செய் சாந்திற் கழுநீர் | |
|
விரைகம ழும்பூக்கள் கோத்த | |
|
வார்செய் தண்டா மரைவளைய | |
|
மைவரை யின்வெள் ளருவிநீர் | |
|
சீர்செய் கோமகளைச் சோ்த்தினாள் | |
|
சீதஞ் செய்யா தொழிந்தனவே. | |
|
(இ - ள்.) ஏர் செய் சாந்தின் - அழகிய சாந்துடன்; நீர் செய் காந்த மணி - நீரைக் கொப்புளிக்கும் சந்திர காந்தக் கல்லையும்; நீண்டு அழகிய கூந்தளம் பாவை - நீண்டு அழகுடைய கூந்தளம் பாவையையும்; கழுநீர் - கழுநீர் மலரையும் ; விரைகமழும் பூக்கள் - மற்ற மணங் கமழும் மலர்களையும்; கோத்த வார்செய் தண்டாமரை வளை - கோத்த நெடிய தாமரை வளையத்தையும்; வரையின் வெள்ளருவி நீர் - மலை வீழருவிநீரையும் கொண்டு; கோமகளைச் சேர்த்தினாள்- அரசிளங்குமரிக்கு அணிவித்தாள்; சீதம் செய்யாது ஒழிந்தன - அவை தண்மையாகாமற் கொதித்தன.
|
(வி - ம்.) கூந்தளம் பாவை : ஒரு வகை மலர்.
|
நீர்செய்காந்தமணி - சந்திரகாந்தக்கல். ஏர் - அழகு. விரை - மணம். கோமகள் - கனகமாலை.
|
( 115 ) |
1672 |
பவ்வத் தங்கட் பிறந்து | |
|
பனிபெயர்க் குந்தண் ணூற்றதாகி | |
|
யெவ்வ மன்னர் படவுலகம் | |
|
விற்கு மரும ணியினைச் | |
|
செவ்வ னூலிற் சித்திரிக்கப் | |
|
பட்டதனைச் சோ்த்திப் பின்னு | |
|
மவ்வ னாறுங் குழலாட்கு | |
|
மற்று மிவைக ணாடினாள். | |
|