கனகமாலையார் இலம்பகம் |
951 |
|
|
அணிவித்து; மவ்வல் நாறும் குழலாட்கு - முல்லை மலரின் மணம் வீசும் கூந்தலை யுடையாட்கு; மற்றும் இவைகள் நாடினாள் - மேலும் இம் மருத்துவத்தைச் செய்யத் தொடங்கினாள்.
|
(வி - ம்.) பவ்வம் - கடல், ஊறு - ஐம்புலனுள் ஒன்று, மன்னர் எவ்வம்பட என்க. எவ்வம் - துன்பம், செவ்வன் - நேரியதாகிய, மவ்வல் - முல்லை.
|
( 116 ) |
1673 |
களிசெய் கோசிக நீர்விழக் | |
|
கடிமாலை மேற்றொ டர்ந்துகீழ் | |
|
நளிசெய் தண்பூஞ் சலஞ்சயன | |
|
மாக்கி நன்னீர் பிலிற்றும்வாய்க் | |
|
குளிர்கொள் சாந்தாற்றி பொன்னால | |
|
வட்டங்கொண் டேந்தி வீசச் | |
|
சளிகொள் சந்தின் கொழுஞ்சாந்த | |
|
மாக முழுது மெழுகினாள். | |
|
(இ - ள்.) களி செய் கோசிக நீர் விழ - கஞ்சி தோய்த்த கோசிகப் பட்டின் நீர் விழும்படி; கடி மாலை மேல் தொடர்ந்து - மணமிகு மாலையால் வந்து விழும்படி அதனை மேலே கட்டி; கீழ் நளி செய்தண் பூஞ்சலம் சயனம் ஆக்கி - கீழே செறிவு செய்த பூவையுடைய நீரிலே படுக்கையை ஆக்கி; நன்னீர் பிலிற்றும் வாய்க் குளிர்கொள் சாந்தாற்றி பொன் ஆலவட்டம் கொண்டு ஏந்தி வீச - நல்ல நீரைத் துளிக்கும் வாயையுடைய குளிர்ந்த சாந்தாற்றியையும் பொன்னாலான ஆலவட்டத்தையும் கையில் ஏந்திப் பணிமகளிர் வீச; சளிகொள் சந்தின் கொழுஞ்சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள் - குளிர்ச்சியைக் கொண்ட சந்தனக் குழம்பை மெய்ம் முழுவதும் பூசினாள்.
|
(வி - ம்.) களி - கஞ்சி, கோசிகம் - ஒருவகைப்பட்டு, நளி - செறிவு பூஞ்சலம் - மலரிட்ட நீர், சயனம் - படுக்கை, சாந்தாற்றி - சிற்றால வட்டம், சளி - குளிர்ச்சி, சந்து - சந்தனமரம்.
|
( 117 ) |
1674 |
கொம்மைவெம் முலையிற் சாந்தங் | |
|
குளிர்செயா தாவி வாட்ட | |
|
வம்மென் மாலை முகங்கரிய | |
|
நீர்துளும்ப நின்று நீடி | |
|
வெம்மை மிக்கது வீரன் | |
|
றொடுத்த விளங்கு மாலை | |
|
பொம்ம லோதிக்குத் தானே | |
|
துணையாம் புணையா யிற்றே. | |
|