| கனகமாலையார் இலம்பகம் |
954 |
|
|
|
யும்; மருப்பிடைக் குளிக்கும் ஆறும் - அது கொல்லப் புகுந்தால் கொம்புகளினிடையே ஆம்படியையும்; நூலிடைக் கிடந்த ஆறே - நூலிற் கூறியவாறே; நுனித்தவன் கொடுப்பக் கொண்டார் - கூரிதாகக் கற்ற சீவகன் கொடுப்பக் கொண்டனர்.
|
|
(வி - ம்.) இது யானையுடன் தனித்துப் போர் செய்யும் முறை.
|
( 121 ) |
| 1678 |
கொடிநெடுந் தேரின் போருங் குஞ்சரங் குறித்த போருங் | |
| |
கடுநடைப் புரவிப் போருங் கரப்பறக் கற்று முற்றி | |
| |
யிடனறிந் திலங்கும் வைவா ளிருஞ்சிலை குந்த மூன்று | |
| |
முடனறிந் தும்ப ரார்க்கு முரைப்பருந் தகைய ரானார். | |
|
|
(இ - ள்.) கொடி நெடுந் தேரின் போரும் - கொடியையுடைய நீண்ட தேரூர்ந்து செய்யும் போரும் ; குஞ்சரம் குறித்த போரும் - யானையாற் கருதிய போரும்; கடுநடைப் புரவிப் போரும் - விரைந்து செல்லும் குதிரைப் போரும்; கரப்பு அறக்கற்று முற்றி - தெளிவாகக் கற்றறிந்து முதிர்ந்து; இடன் அறிந்து இலங்கும் வைவாள் இருஞ்சிலை குந்தம் மூன்றும் - (இவ்வூர்த்திகளிலிருந்து) வினை செய்யும் இடம் அறிந்து (செலுத்தும் பொழுது) விளங்கும் வாளும் பெரிய வில்லும் எறிகோலும் என்கிற மூன்றையும்; உடன் அறிந்து - சேர அறிந்து; உம்பரார்க்கும் உரைப்ப அருந் தகையரானார் - வானோர்க்கும் புகழ்தற்கரிய தகுதியுடையவரானார்.
|
|
(வி - ம்.) தேரின் போர் - தேர்கொண்டு செய்யும் போர். குஞ்சரம் - யானை. கரப்பற என்றது நன்கு விளக்கமாக என்றவாறு. வைவாள் - கூரிய வாள். இருஞ்சிலை - பெரிய வில். குந்தம் - எறிகோல். உம்பரார் - தேவர்.
|
( 122 ) |
| 1679 |
தானையு ளன்றி நின்ற | |
| |
தனியிட மொற்றி மன்னர் | |
| |
தானைமேற் சென்ற போழ்தும் | |
| |
வென்றியிற் றளர்த லின்றித் | |
| |
தானையை யுடைக்கும் வெம்போர்த் | |
| |
தருக்கினார் மைந்த ரென்று | |
| |
தானைசூழ் மன்னற் குய்த்தார் | |
| |
மன்னனுந் தருக வென்றான். | |
|
|
(வி - ம்.) தானையுள் அன்றி - படையினுள் அல்லாமல்; தனியிடம் ஒற்றி - தாம் தனியே நின்ற இடத்தை ஒற்றிப் பார்த்து; மன்னர் தானைமேல் சென்ற போழ்தும் - பகை மன்னரின் படைமேற் சென்ற காலத்தும்; வென்றியில் தளர்தல்
|