கனகமாலையார் இலம்பகம் |
956 |
|
|
நோக்கியும் கீழ்நோக்கியும் நேருமே எய்தலாம்!' இதுவும் நச்சினார்க்கினியர் விளக்கம் (கந்தரம் - கழுத்து)
|
( 124 ) |
1681 |
விசயனே விசயன் விற்போர்க் | |
|
கதம்பனே முருகன் வேற்போர்த் | |
|
திசையெலாம் வணக்கும் வாட்போர்க் | |
|
கந்தணன் செம்பொ னாம | |
|
னசைவிலான் யானைத் தோ்ப்போர்க் | |
|
கசலனே யசல கீர்த்தி | |
|
வசையிலான் புரவிச் சேனென் | |
|
றியாவரும் புகழப் பட்டார். | |
|
(இ - ள்.) விற்போர் விசயன் விசயனே - விற் போரிலே விசயன் அருச்சுனனே; வேற் போர் கதம்பன் முருகனே - வேற் போரிலே கதம்பன் முருகனே; திசையெலாம் வணங்கும் வாட்போர்க்குச் செம்பொன் நாமன் அந்தணன் - எல்லாத் திக்கினும் வணங்கும் வாட்போரிலே கனகன் பரசுராமனே; யானைத் தேர்ப் போர்க்கு அசலகீர்த்தி அசைவிலான் அசலனே - யானைப் போரிலும் தேர்ப் போரிலும் அசலகீர்த்தி யென்பான் அசைவிலானாகிய அசலனே; புரவிச்சேன் வசையிலான் என்று - புரவிக்குச் சேனன் குற்றமில்லாத நகுலனே என்று; யாவரும் புகழப்பட்டார் - எல்லோராலும் இவ் வைவரும் புகழப்பட்டார்.
|
(வி - ம்.) விசயனே விசயன் என்புழி முன்னின்ற விசயன் அருச்சுனனையும் பின்னது தடமித்தன் மகனாகிய விசயனையும் குறிக்கும். கதம்பன், (செம்பொனாமன்) கனகன் அசலகீர்த்தி சேனன் என்னு மிந் நால்வரும் விசயன் - தம்பிமார்கள். சேனன் - சேன் என நின்றது. அந்தணன் - பரசுராமன், அசலன் - சச்சந்தன் படைத்தலைவன், வசையிலான் என்றது நகுலனை.
|
( 125 ) |
1682 |
காவலன் மக்க ளாக்கங் | |
|
கண்டுகண் குளிர்ந்து நோக்கி | |
|
யேவலா னரச னொன்றோ | |
|
விருபிறப் பாள னல்லார்க் | |
|
காவதன் றின்ன மாட்சி | |
|
யவனையா னிகளம் பெய்து | |
|
காவல்செய் திடுவல் வல்லே | |
|
காளையைக் கொணர்மி னென்றான். | |
|
(இ - ள்.) காவலன் மக்கள் ஆக்கம் கண்டு கண் குளிர்ந்து நோக்கி - அரசன் மக்கள் கல்வியைக் கண்டு மகிழ்ந்து நோக்கி;
|