கனகமாலையார் இலம்பகம் |
957 |
|
|
ஏவலான் அரசன் ஒன்று இரு பிறப்பாளன் - இந்த வில்வல்லான் அரசனாதல், ஒன்று அந்தணன் ஆதல் ஆம்!; அல்லார்க்கு இன்ன மாட்சி ஆவது அன்று - மற்றோர்க்கு இத்தகைய கல்வி உண்டாகாது; (ஆதலால்); அவனை யான் நிகளம் பெய்து காவல் செய்திடுவல் - அவனை யான் தளையொன்று இட்டுக் காவலில் இடுவேன் : வல்லே காளையைக் கொணர்மின் என்றான் - இப்போதே காளையாகிய அவனைக் கொண்டு வருக என்றான்.
|
(வி - ம்.) மகட் கொடையை நிகளம் என்றான். காற் கட்டு என்னும் வழக்குண்மையின். ஒன்று என்பது அல்லது என்னும் பொருட்டு.
|
( 126 ) |
1683 |
கல்வியுங் கொடிது போலுங் |
|
|
காவலன் காளை தன்னை |
|
|
யொல்லலன் சிறைசெய் கின்றா |
|
|
னென்றவன் கருதிற் றோரார் |
|
|
பல்சனம் பா¤ந்து நிற்பப் |
|
|
பார்த்திப குமரன் சோர்ந்தான் |
|
|
வில்வலாற் கொண்டு வேந்தன் |
|
|
வேறிருந் திதனைச் சொன்னான். |
|
|
(இ - ள்.) காவலன் காளை தன்னை ஒல்லலன் சிறை செய்கின்றான் - அரசன் இக் கல்வியுடைய காளையைப் பொறானாய்ச் சிறைப்படுத்துகின்றான், ஆதலால்; கல்வியும் கொடிது போலும் என்று - கல்வியும் தீமைதரும் போலும் என்று கருதி; அவன் கருதிற்று ஓரார் பல்சனம் பரிந்து நிற்ப - அரசன் எண்ணியதை அறியாராய்ப் பலரும் வருந்தி நிற்கின்ற அளவிலே; பார்த்திப குமரன் சேர்ந்தான் - அரச குமரனாகிய சீவகன் வந்தான்; வேந்தன் வில்வலாற் கொண்டு வேறு இருந்து இதனைச் சொன்னான் - அரசன் வில் வல்லவனாகிய அவனை அழைத்துக்கொண்டு சென்று தனியே இருந்து இம் மொழிகளைக் கூறினான்.
|
(வி - ம்.) சிறை செய்கின்றான் ஆதலால் கல்வியும் கொடிது போலும் என மாறுக. ஒல்லலன் - பொறாதவன், கருதிற்று - கருதியது. சனம் - மக்கள். பார்த்திப குமரன் - இறைமகன்; ஈண்டுச் சீவகன். வேந்தன் - தடமித்தன்.
|
( 127 ) |
1684 |
புண்முழு திறைஞ்சுங் கோட்டுப் |
|
|
பொருகளி றனைய தோன்றன் |
|
|
மண்முழு தன்றி வானும் |
|
|
வந்துகை கூடத் தந்தாய் |
|
|