பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 958 

1684 கண்முழு துடம்பிற் பெற்றேன்
  காளைகைம் மாறு காணேன்
பண்முழு துடற்றுந் தீஞ்சொற்
  பாவைநின் பால ளென்றான்.

   (இ - ள்.) புள் முழுது இறைஞ்சும் கோட்டுப் பொருகளிறு அனைய தோன்றல் - பறவைகள் எல்லாம் (ஊன் உண்ண) வந்து படியும் கோடுகளையுடைய களிறு போன்ற தோன்றலே!; மண்முழுது அன்றி வானும் வந்து கைகூடத் தந்தாய் - நில முழுதுமே அன்றி விண்ணும் வந்து கைகூடுமாறு போர்க்கலையைத் தந்தனை; கண்முழுது உடம்பில் பெற்றேன் - உடம்பு முழுதிலும் கண்பெற்றேன் ஆயினேன்; கைம்மாறு காணேன் - கைம்மாறு செய்ய அறியேன்; காளை - காளையே!; பண் முழுது உடற்றும் தீ சொல் பாவை நின் பாலள் என்றான் - இசையையெல்லாம் வருத்தும் இன்மொழியுடைய என் மகளாகிய பாவையாள் நினக்குரியள் என்றான்.

   (வி - ம்.) இவர்க்கு நீ கொற்றம் கொடுத்தலின், மண் முழுதும் கை கூடுதல் அன்றி, மறுமையில் வானும் வந்து கைகூடும்படி ஞானநெறியைத் தந்தாய்; நல்வினை செய்தாருடம்பிற் கண்முழுதும் யான் பெற்றேன் என்றது, இவர் போர்த் தொழில் காணப்பெறுதலின் ஊனக்கண்ணும், இவரை நன்னெறியைச் சேர்வித்தலின் ஞானக் கண்ணும் பெற்றேன் என்றவாறு.

   இனி வியந்து கூறுகின்றவன் மண்ணும் விண்ணும் கைகூடத் தந்தாய்; யானும் உடம்பெல்லாம் கண்பெற்றேன் என்றுமாம்; இந்திரனானேன் என்றுமாம் - இவ்வாறு நச்சினார்க்கினியர் கூறுகின்றார்.

( 128 )
1685 முடிகெழு மன்னன் சொல்ல
  மொய்கொள்வேற் குருசி றேற்றான்
வடிவமை மனனொன் றாக
  வாக்கொன்றா மறுத்த லோடுந்
தடிசுவைத் தொளிறும் வேலான்
  றன்கையான் முன்கை பற்றி
யிடிமுர சனைய சொல்லா
  லிற்றென விளம்பு கின்றான்.

   (இ - ள்.) முடி கெழு மன்னன் சொல்ல - (இவ்வாறு) முடியுடைய மன்னன் மொழிய; மொய்கொள் வேல் குருசில் தேற்றான் - ஒளி பொருந்திய வேலேந்திய சீவகன் தெளிவுறக் கூறானாய்; வடிவமை மனன் ஒன்றாக வாக்கு ஒன்றா மறுத்தலோடும் - கனகமாலையின் வடிவம் பொறிக்கப் பெற்ற மனம்