கனகமாலையார் இலம்பகம் |
959 |
|
|
வேட்கையுறவும் மொழியால் வேட்கை தோன்றாமல் மறுத்தவுடன்; தடி சுவைத்து ஒளிறும் வேலான் தன் கையால் முன் கைபற்றி - ஊனைச் சுவைபார்த்து விளங்கும் வேலினான் தன் கையினாலே சீவகனுடைய முன் கையைப் பிடித்துக்கொண்டு; இடிமுரசு அனைய சொல்லால் இற்று என விளம்புகின்றான் - இடியும் முரசும் போன்ற மொழியால் இத்தன்மைய தென்று ஓரு மொழி கூறுகின்றான்.
|
(வி - ம்.) 'வடியமை' என்பது பாடமாயின், ஆராய்ச்சி அமைந்த என்க.
|
வடிவு அமை மனம் - கனகமாலை உருவம் பதியப்பெற்ற மனம். தடி - தசை, வேலான் - தடமித்தன், இற்று - இத்தன்மைத்து.
|
( 129 ) |
1686 |
பூவியல் கோயில் கொண்ட |
|
|
பொன்னனா ளனைய நங்கை |
|
|
காவியங் கண்ணி வந்து |
|
|
பிறத்தலுங் கண்க ளீண்டி |
|
|
மூவிய றிரித லின்றிச் |
|
|
சாதக முறையிற் செய்தா |
|
|
ரேவியல் சிலையி னாய்க்கே |
|
|
யுரியளென் றுரைப்ப நேர்ந்தான். |
|
|
(இ - ள்.) பூ இயல் கோயில் கொண்ட பொன் அனாள் அனைய காவி அம் கண்ணி நங்கை - தாமரை மலரால் இயன்ற கோயிலைக் கொண்ட திருவைப் போன்றவளும், காவி அனைய கண்ணாளும் ஆகிய இப் பெண்; வந்து பிறத்தலும் - எனக்கு மகளாக வந்து பிறந்தவுடனே; கணிகள் ஈண்டி - சோதிடர்கள் கூடி; மூஇயல் திரிதல் இன்றி முறையின் சாதகம் - மூன்றியலும் கெடுதல் இல்லாமல் முறைப்படி சாதகத்தை; ஏ இயல் சிலையினாய்க்கே உரியள் என்று செய்தார் - அம்பு பொருந்திய வில்லையுடைய நினக்கே பொருந்தியவள் என்று குறித்தனர்; உரைப்ப நேர்ந்தான் - என அரசன் கூறச் சீவகன் ஒப்பினான்.
|
(வி - ம்.) மூவியல் : சிரோதயம், பூபதனம், தெரியுங் காலம், மூவியலை 'உதயா ரூடக்கவிப் புக்கள்' என்பர் நச்சினார்க்கினியர்.
|
கலைகளும் வடிவு முதலியனவும் உடையவன் ஒருவன் என்றலின் இவனே யாயிற்று.
|
( 130 ) |
1687 |
வாருலா முலையி னாட்கும் |
|
|
வரிசிலைத் தடக்கை யாற்குஞ் |
|
|
சீருலாங் கோலஞ் செய்தார் |
|
|
செப்பினார் வதுவை நன்னாட். |
|
|